திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை 14 நாட்களுக்குப் பிறகு காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

திருவள்ளூர் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை 14 நாட்களுக்குப் பிறகு காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
நடந்தது என்ன?
திருவள்ளூரில் உள்ள 8 வயதுச் சிறுமி முன்கூட்டியே பள்ளி முடிந்ததால், அருகில் ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். ரயில் நிலையத்தைக் கடந்து ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத மாந்தோப்பு வழியாக சிறுமி சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், சிறுமியை கத்தி முனையில் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் சிறுமியின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். குற்றவாளி சிறுமியைத் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதிமுகவும் இதுதொடர்பாக போராட்டத்தை அறிவித்து இருந்தது.
சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைது
இந்த நிலையில் காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து, விசாரித்து வந்தனர். 3 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. துப்பு கொடுத்தோருக்கு, காவல் துறை சன்மானம் ரூ.5 லட்சம் அறிவித்து இருந்தது. தொடர்ந்து 13 நாட்களுக்கும் மேலாக குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், இன்று குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் காட்டிய திருவள்ளூர் சிறுமி
சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை பாதிக்கப்பட்ட திருவள்ளூர் சிறுமி அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.






















