New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
விடுமுறை நாளான இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் குடும்பத்துடன் சென்று பார்க்க எந்தெந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடுகிறது என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சனி மற்றும் ஞாயிறு என்றாலே பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காக ஒதுக்கிவிடுவார்கள். அந்த வகையில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலுமே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்கள் குடும்பத்தோடு சென்று பார்க்க எந்தெந்த படங்கள் தியேட்டர்களில் வந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. தலைவன் தலைவி:
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி - நித்யாமேனன் ஜோடி நடித்துள்ள இந்த படம் குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு முதல் தேர்வாக அமைந்துள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படம் குடும்ப பின்னணி கதையாக அமைந்துள்ளது. ஆர்கே சுரேஷ், யோகிபாபு, தீபா சங்கர், ரோஷிணி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

2. மாரீசன்:
மாமன்னன் படத்திற்கு வடிவேலு - பகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாரீசன். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். காமெடி த்ரில்லர் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

3. ஃபென்டாஸ்டிக் ஃபோர்:
ஹாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஃபென்டாஸ்டிக் ஃபோர் மிகவும் பிரபலம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் புதிய பாகம் இன்று வெளியாகியுள்ளது. உலகை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதையாகவே இந்த படமும் அமைந்துள்ளது. சூப்பர் ஹீரோக்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் தீனியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. பன் பட்டர் ஜாம்:
பிக்பாஸ் புகழ் நடிப்பில் வெளியான திரைப்படம் பன்பட்டர் ஜாம். இந்த படம் கடந்த 18ம் தேதியே ரிலீஸ் ஆகிவிட்டது. காதல் காமெடி படமாக இந்த படம் வெளியாகியுள்ளது. ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆதியா பிரசாத், பாவ்யா த்ரிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படங்கள் மட்டுமின்றி கடந்த வாரங்களில் வெளியாகிய ஜுராசிக் வேர்ல்ட், சூப்பர்மேன், எஃப் 1 போன்ற ஹாலிவுட் படங்களும் தற்போது வரை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆகஷன், த்ரில்லர், குடும்ப படம், சூப்பர் ஹீரோக்கள் படம் என அனைத்து விதமான படங்களும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.




















