உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
டெல்லியில் உடலுறவில் திருப்திப்படுத்தாத கணவனை மனைவி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக திருமணத்தை மீறிய உறவுகளும், அதனால் ஏற்படும் கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், உடலுறவில் திருப்திப்படுத்தாத காரணத்தால் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கணவன்:
டெல்லியைச் சேர்ந்தவர் முகமது ஷாகித் என்ற இர்ஃபான். இவரது மனைவி ஃபர்சானா கான். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஷாகித் சுயநினைவில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த மனைவி:
பின்னர், ஷாகித்தின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில் ஷாகித்தின் மனைவி ஃபர்சானா அவருக்கு அதிக கடன் இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனாலும், அவரது உடலில் சில காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணையைத் தொடர்ந்தனர். மேலும், பிரேத பரிசோதனையிலும் ஷாகித் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது. ஃபர்சானாவின் செல்போனை பரிசோதனை செய்த போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, தூக்க மாத்திரை பயன்படுத்தி கொலை செய்வது எப்படி? என்பதை அவர் இணையத்தில் தேடியுள்ளார். மேலும், உரையாடல்களை அழிப்பது எப்படி என்றும் இணையத்தில் தேடியுள்ளார்.
உடலுறவில் திருப்தி இல்லை:
பின்னர், ஷாகித்தின் உடலில் இருந்த காயம் குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டதால் உண்டான காயம் அது என்று கூறினார். இதையடுத்து, காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

கொலை செய்யப்பட்ட ஷாகித்திற்கு இணையத்தில் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், அவருக்கு ஏராளமான கடன் இருந்துள்ளது. மேலும், ஷாகித் திருமணத்திற்கு பிறகு ஃபர்சானாவை உடலுறவில் போதியளவு திருப்திபடுத்தவில்லை. ஷாகித் - ஃபர்சானா ஜோடி தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தின் பேரேலியில் வசித்து வந்துள்ளனர். அப்போது, ஷாகித்தின் உறவினருடன் ஃபர்சானாவிற்கு தொடர்பு உண்டாகியுள்ளது. அந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
உள்ளே தள்ளிய போலீஸ்:
இந்த நிலையில், கணவனின் கடன் தொல்லை, உடலுறவில் திருப்திப்படுத்தாமை, கள்ளக்காதல் போன்ற காரணங்களால் அவரைத் தீர்த்துக்கட்ட ஃபர்சானா முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரை கொலை செய்து இதை தற்கொலை என்று திசை திருப்ப ஃபர்சானா நாடகம் நடித்துள்ளார். இந்த உண்மைகளை அவரே போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார். ஆனால், போலீசார் விசாரணையில் அனைத்து உண்மையும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஃபர்சானாவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















