மேலும் அறிய

Kamalhaasan: அம்மா யாருன்னு தெரியாமல் வளர்ந்த கமல்.. தாயாக வந்து தாங்கிய அண்ணி..!

கமல்ஹாசன் குடும்பம் மிகப்பெரியது. அவரது குடும்ப உறுப்பினர்களான சாருஹாசன், சந்திரஹாசன், சுஹாசினி, மணிரத்னம் என பலரும் சினிமாத்துறையில் தனக்கென தனியிடம் பிடித்தவர்கள்.

நடிகர் கமல்ஹாசனுக்காக தான் நான் திருமணம் செய்துக் கொண்டேன் என அவரது சகோதரர் சாருஹாசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் குடும்பம் மிகப்பெரியது. அவரது குடும்ப உறுப்பினர்களான சாருஹாசன், சந்திரஹாசன், சுஹாசினி, மணிரத்னம் என பலரும் சினிமாத்துறையில் தனக்கென தனியிடம் பிடித்தவர்கள். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் சாருஹாசன் தன் மனைவி கோமளவல்லியுடன் பங்கேற்றார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய சாருஹாசன், “எனக்கு 94 வயது தான் ஆகிறது. எங்களுக்கு திருமணமாகி 69 வயதாகிறது. என்னுடைய மனைவிக்கு 89 வயதாகிறது. இந்த வயதிலும் நாங்கள் ஆரோக்கியமாக இருக்க காரணம் வயசாகி விட்டது என்பதை மறப்பது தான். எங்களுடைய திருமணம் என்பது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது தான். பெற்றோர்கள் இல்லாத நிலையில் பாட்டியால் வளர்க்கப்பட்ட இந்த பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என என் அம்மா சொல்லிவிட்டார். 

1954 ஆம் ஆண்டு தான் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கமல்ஹாசன் சொன்னார். அதற்காகவே எங்களுடைய திருமணம் அவசர அவசரமாக நடைபெற்றது. எனக்கு திருமணத்தில் நம்பிக்கையே கிடையாது. 70 வருடங்களில் மக்கள் தொகை 40 கோடியாக அமைந்தது. மக்கள் தொகை அதிகமாக இருந்ததால் திருமணம் செய்ய வேண்டாம் என நினைத்தேன்.என்னுடைய அம்மா கர்ப்பமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் திருமணம் செய்துக் கொண்டேன்” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய கோமளவல்லி, “என்னுடைய கணவர் சாருஹாசனுக்கு 2 தம்பிகள், ஒரு தங்கை. இவர்களில் சிறந்தவர் சந்திரஹாசன் தான். அவர் அப்படி பாடுவார், கெட்டிக்காரர். என்னுடைய குழந்தை எல்லாம் அவர் தான் வளர்த்தார். இன்னைக்கும் என் குழந்தைகள் ஒழுக்கமாக இருப்பதற்கு காரணம் சந்திரஹாசன் தான். அவர் எனக்கு சிறந்த நண்பராக இருந்தார். 

எங்களுடைய திருமணத்துக்கு பிறகு தான் கமல்ஹாசன் இருந்தார். 4, 5 வயது வரை என்னை தான் அம்மாவாக நினைத்திருந்தார். என் மாமியாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வீட்டில் வேலை செய்தவர்கள் உண்மையை சொல்லவும் கமல் ஒருநாள் முழுக்க அழுதான்.  என்னோட மாமியாருக்கும் கமல் பிறந்ததும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எங்களுக்கு 1955ல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதன்பிறகு 1957ல் தான் குழந்தை பிறந்தது. அந்த இடைப்பட்ட வருடம் கமலை நான் தான் வளர்த்தேன். அவன் இன்றைக்கும் என் குழந்தைகளை சித்தப்பாவாக இல்லாமல் சகோதர பாசத்துடன் தான் அணுகுவான்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

மேலும் படிக்க: Shruthi Rajanikanth: சிறுவயதில் பாலியல் தொல்லை.. பெண் குழந்தை பிறந்ததும் மன்னிப்பு.. அதிரவைக்கும் சோகக்கதை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget