ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

"ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்" என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பேசியுள்ளார். இதுதான் தமிழர்களின் தனிக்குணம் என்றும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
"நம்மை அடக்க நினைத்தால் ஒன்றாக எதிர்ப்போம்"
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
அதில், ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று பரப்புரை மேற்கொள்ளும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளது. அப்போது பேசிய ஸ்டாலின், "உடன்பிறப்பே வா நிகழ்ச்சி மூலம் இதுவரை 24 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஒன் - டூ- ஒன் சந்திப்பை நடத்தியிருக்கிறோம்.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமில்லை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்!
இதையும் படிக்க: தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
என்ன பேசினார் முதல்வர் ஸ்டாலின்?
நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்- ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ – ‘common DP’-யை கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள்.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை என்று மட்டும் நினைக்காதீர்கள். இது, தமிழ்நாட்டு மக்களை நம்ம மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்குற ஒரு முன்னெடுப்பு" என திமுகவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதையும் படிக்க: பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!





















