Shruthi Rajanikanth: சிறுவயதில் பாலியல் தொல்லை.. பெண் குழந்தை பிறந்ததும் மன்னிப்பு.. அதிரவைக்கும் சோகக்கதை!
கேரளாவில் உள்ள அம்பலப்புழாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி ரஜினிகாந்த். சீரியல் நடிகையான இவர் ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான சக்கப்பழம் என்ற தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
பிரபல மலையாள நடிகை ஸ்ருதி ரஜினிகாந்த் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள அம்பலப்புழாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி ரஜினிகாந்த். சீரியல் நடிகையான இவர் ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான சக்கப்பழம் என்ற தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் உன்னிக்குடன், மானசபுத்ரி, எட்டு சுந்தரிகளும் ஞானும் உள்ளிட்ட தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். ஸ்ருதி ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்டு இருக்கும் மன அழுத்த பிரச்சினையால், பல வாரங்களாக சிரிக்க கூட முடியாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் ஆறுதல்களை தெரிவித்தனர்.
இப்படியான நிலையில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து ஸ்ருதி ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, “நான் ரொம்ப டல் ஆக உணர்கிறேன். இதற்கு காரணம் காதல் தோல்வி அல்ல, தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் தான். உறவினர் ஒருவர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குடும்பத்தினருக்கு கூட தெரியாது. நான் சிறு வயதில் பாலியல் தொல்லை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளேன். இதை வெளியே சொல்லவே எனக்கு கடினமாக இருக்கிறது. அது ஒரு இருண்ட பக்கமாக என் வாழ்க்கையில் அமைந்து விட்டது.
நான் அனைவரையும் நன்றாக நடத்துவேன். இதனால் யாரும் என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த சம்பவம் நடந்து கொண்டதில் இருந்து என்னை நானே தற்காத்துக் கொள்ள தொடங்கி விட்டேன். இந்த நேர்காணலை பார்த்து என்ன அம்மா என்னவென்று நிச்சயம் கேட்பார். நான் மிகவும் தைரியமாக இருந்ததால் அந்த சம்பவம் நடந்த போது சத்தம் போட்டேன்.
அப்படி செய்வதால் அதிகப்பட்சம் எதிரில் இருப்பவர் அதிகப்பட்சம் நம்மை கொலை செய்வார். ஆனால் சுயமரியாதையை இழப்பதை விட உயிரை விடுவது மேலானது. அதனால் எதற்கும் பயப்படக் கூடாது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் என்னிடம் தவறாக நடந்து கொண்டது ஒரு பெண். ஆனால் அவருக்கு திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து என்னிடம் மன்னிப்பு வேண்டி குறுஞ்செய்தி அனுப்பினாள். நான் பத்திரமாக பார்த்துக் கொள் என தெரிவித்தேன். தைரியமாக நடந்து கொண்டதால் அதன்பிறகு அப்பெண் நான் உண்மையை வெளியே சொல்லிவிடுவேனோ என பயந்து யாரிடமும் நெருங்கக்கூட மாட்டார்” என ஸ்ருதி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.