மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil Poornima: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா மீது வன்மத்தை காட்டுகிறாரா கமல்ஹாசன்? - மனம் திறந்து பேசிய தந்தை
"என் மகளை பேசுவதை போல் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களை பேசினால் சங்கடம் ஏற்படும். அதை உணர்ந்து தரம் குறைந்த விமர்சனங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்" என்ற பூர்ணிமாவின் தந்தை கூறியுள்ளார்.
Bigg Boss 7 Tamil Poornima: பூர்ணிமா மீது கமல்ஹாசன் வன்மத்தை காட்டவில்லை என்றும், அவரது தவறை சுட்டிக்காட்டுவதாகவும் பூர்ணிமாவின் சகோதரரும், தந்தையும் கூறியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா பங்கேற்று விளையாடி வருகிறார். ஆரம்பம் முதலே எவிக்ஷன் ஆகாத ஒரு போட்டியாளராக பூர்ணிமா உள்ளார். பிக்பாஸில் மாயா, பூர்ணிமா நட்பு, அர்ச்சனாவுடனான சண்டை, விஷ்ணு உடனான பழக்கம் என எல்லாமே விவாதமாகி வருகிறது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பூர்ணிமாவின் சகோதரும், அவரது தந்தையும் உரையாடியுள்ளனர்.
அதில், “இதுவரை எந்த பிக்பாஸ் சீசனிலும் இல்லாத அளவில் ஒரு பெண் இருமுறை கேப்டன்ஷிப் பெற்றது பூர்ணிமா மட்டுமே. பூர்ணிமாவுக்கு மெத்தனம், தலைக்கனம் என்று எதுவும் இல்லை. அவர் புரியாமல் தான் சில தவறுகளை செய்துள்ளார். திடீரென வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்ததால் பூர்ணிமாவால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அப்படி நடந்துக் கொண்டார்.
முன்னாடியே வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என்பது தெரிந்தது தான். அதை புரிந்து விளையாடினாலே போதும். வைல்டு கார்டு ஒரு தடைக்கல் போல், அதை தாண்டி போனாலே போதும். எண்டர்டெயின்மெண்ட் மூலமாக பூர்ணிமா செய்தது புல்லி கேங்கில் அவர் இருப்பதாக மாறியது.
பூர்ணிமாவுக்கு மாயாவின் நட்பு ரொம்ப அதிகமாக உள்ளது. அதேபோல் அர்ச்சனா, மாயாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. பூர்ணிமா இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தை பேசுவதை தவறு தான். அதை பூர்ணிமா மாற்றி கொள்வார். வெளியே வந்தால் நாங்கள் அவருக்கு அறிவுறுத்துவோம். பூர்ணிமாவுக்கு விஷ்ணுவுக்கும் உள்ளே இருப்பது நட்பு மட்டும் தான். வெளியே வந்து பூர்ணிமாவுக்கு பிடித்திருந்தால் நாங்கள் ஒன்னும் சொல்ல மாட்டோம். வீடு இருந்தா சண்டை இருக்க தான் செய்யும். அதுபோல தான் பிக்பாஸ் வீட்டில் சண்டை சர்ச்சரவு இருக்கும். பூர்ணிமாவுக்கு போட்டியாளராக தினேஷ் மற்றும் அர்ச்சனா உள்ளனர்.
என் வீட்டை போல தான் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். என் மகளை பேசுவதை போல் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களை பேசினால் சங்கடம் ஏற்படும். அதை உணர்ந்து தரம் குறைந்த விமர்சனங்கள் வைப்பதை தவிர்க்கலாம்” என்றார். மேலும், “பேமிலி டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால், என் பொண்ணுக்கு அதிகமாக பேசாத. யாராவது உனக்கு அட்வைஸ் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்” என்று கூறுவேன் என்றார்.
இறுதியாக ”கமல்ஹாசன் பூர்ணிமா மீது வன்மத்தை காட்டவில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். பூர்ணிமாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமல்ஹாசன் பேசவில்லை. அவர் செய்த தவறை பூர்ணிமா சுட்டிக்காட்டுகிறார். அவ்வளவு தான்” என்றனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion