மேலும் அறிய

IND VS ENG T20: கோலியின் சாதனைகளுக்கு ஆபத்து..! டி20 போட்டிகளில் இந்திய வீரர் திலக் வர்மா புதிய மைல்கல்

IND VS ENG T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வீரர் திலக் வர்மா புதிய சாதனை படைத்தார்.

IND VS ENG T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வீரர் திலக் வர்மா கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய அணி திணறல்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்ச தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள்  முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 45 ரன்களை சேர்த்தார். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 78 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அணியின் வெற்றி கேள்விக்குறியானது. 

ஆட்டநாயகன் திலக் வர்மா:

இருப்பினும் மறுமுனையில்  இளம் வீரர் திலக் வர்மா நிலைத்து நின்று ஆடினார். சீரான் இடைவெளியில் பவுண்டர் மற்றும் சிக்சர்களை விளாசினார். அவருக்கு பக்க பலமாக வாஷிங்டன் சுந்தரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்திய அணி மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டது. 26 ரன்கள் சேர்த்து இருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். இருப்பினும் திலக் வர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய, இங்கிலாந்து அணி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அதன் விளைவாக இங்கிலாந்திற்கு பிரகாசமாக இருந்த வெற்றிவாய்ப்பு, இந்தியா பக்கம் திரும்பியது. இறுதியில் 19.2 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.  இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய திலக் வர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல், 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 72 ரன்களை விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2-0 என முன்னிலை வகிக்கிறது.

கோலியின் சாதனை முறியடிப்பு:

நெருக்கடியான சூழலில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதோடு, சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளர். சேப்பாக்கம் போட்டிக்கு முன்னதாக அவர் களமிறங்கிய 3 போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல், முறையே 19,120 மற்றும் 107 ரன்களை விளாசி இருந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டமிழக்காமல், 318 ரன்களை குவித்துள்ளார்.  முன்னதாக இந்த சாதனை, நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மன் (271 ரனக்ள்) தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, இந்தியா சார்பில் சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி (258), சஞ்சு சாம்சன் (257), ரோகித்சர்மா (253), மற்றும் ஷிகர் தவான் (252) ஆகியோரின் சாதனகளையும் திலக் வர்மா முறியடித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Embed widget