TN Republic Day 2025 Parade LIVE: மெரினாவில் குவிந்த மக்கள்..! வண்ணமயமான அணிவகுப்பு, குடியரசு தின கொண்டாட்டம்
Tamil Nadu Republic Day 2025 Parade LIVE: குடியரசு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் நடைபெற்ற அணிவகுப்பை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டுகளிக்கின்றனர்.

Republic Day 2025 Parade LIVE: குடியரசு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி கொடியேற்றினார்.
குடியரசு தின கொண்டாட்டம்
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு வந்த ஆளுநர் ஆர். என். ரவியை முதாலமைச்சர் ஸ்டாலின் பூக்கூடை அளித்து வரவேற்றார். தொடர்ந்து, அங்கிருந்த கொடிக்கம்பத்தில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்ற, அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவ, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
குடியரசு தின விழா அணிவகுப்பு நேரலை:
குடியரசு தின அணிவகுப்பு
தொடர்ந்து ராணுவப் படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர். பிறகு கடற்படை ஊர்தியில் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணி வகுத்து கொண்டு வரப்படுகின்றன. அதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணி வகுத்து வருகின்றன.





















