Varunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!
கொஞ்சநஞ்சம் பேச்சா... திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று டிஐஜி வருண்குமார் வெளியிட்டிருக்கும் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீமானை குறிப்பிட்டுதான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து பேசிவருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சீமான் பெரியர் குறித்து தவறாக பேசிவிட்டார் என்று சொல்லி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
அண்மைக்காலமாக சீமான் மீது தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நாம் தமிழர் கட்சியினர் கொத்து கொத்தாக அக்கட்சியில் இருந்து விலகுவது வாடிக்கையாகி வருகிறது. சீமானின் கூடாரம் காலியாகிறதா என்று கேள்வியும் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் சீமானுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் நெருக்கடி வருவதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவிட்டது.
இச்சூழலில் தான் சீமானை கடுமையாக தாக்கி டிஐஜி வருண்குமார் Facebook பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”கொஞ்சநஞ்சம் பேச்சா... திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ”என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, “நான் வகிக்கும் ஐபிஎஸ் மற்றும் எஸ்.பி பதவி என்பது திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வியர்வை சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என்று வருண்குமார் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தார்.
இதுபோல் சீமான் பெயரை குறிப்பிடாமல் தொடர்ந்து அவர் சீமானுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். ஒரு காவல் அதிகாரிக்கு எவ்வளவோ வேலை இருக்கும் ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு சீமானுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு சமூக பதட்டத்தை ஒரு டிஐஜி யே உருவாக்கலாம என்றும், வருண்குமார் சீமானுக்கு எதிராக அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது பொது வெளொஇயில் இவர் இப்படி ஒரு கட்சியின் தலைவரை ஒருமையில் பேசுவது காவல் துறைக்கு அழகல்ல என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்





















