Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நடைபெற உள்ள துபாய் மைதானங்களில், இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நடைபெற உள்ள துபாய் மைதானங்கள், இந்திய அணிக்கு சாதகமா என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் ட்ராபி:
நீண்ட இழுபறிக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியை, ஹைப்ரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. அதன்படி, இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த போட்டிகளும் துபாயிலேயே நடத்தப்படும். வரும் 19ம் தேதி லீக்சுற்று போட்டிகள் தொடங்க, 20ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில் துபாய் மைதானங்களில், இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இந்திய அணியின் புள்ளி விவரங்கள்:
துபாயில் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறந்த வெற்றி சதவிகிதத்தை கொண்டுள்ளது. அதாவது துபாயில் விளையாடி ஒரு போட்டியில் கூட இந்திய அண் தோல்வியையே சந்திக்கவில்லை. ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது, ஐந்து போட்டிகளில் வென்றுள்ளது, ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா இந்த மைதானத்தில் பாகிஸ்தானை இரண்டு முறை எதிர்கொண்டுள்ளது, இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் துபாயில் வங்கதேசம், ஹாங்காங், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடி, தொடர்ச்சியான வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் ட்ராபி - இந்தியாவின் போட்டிகள்:
இந்திய கிரிக்கெட் அணி பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக தனது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் முதல் போட்டியில் பங்கேற்கும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 23 ஆம் தேதி, பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும். இறுதியாக மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா களமிறங்கும்.
இந்தியா - பாகிஸ்தான்: நேருக்கு நேர்
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 135 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில்
இந்தியா: 57 வெற்றிகள்
பாகிஸ்தான்: 73 வெற்றிகள்
முடிவு இல்லை: 4 போட்டிகள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பையில் நடந்தது. அதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பிப்ரவரி 23 அன்று துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி மீண்டும் ஒருமுறை பரம எதிரிகளான இரு அணிகளையும் நேருக்கு நேர் சந்திக்கும்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி
கேப்டன்: ரோகித் சர்மா
துணை கேப்டன்: சுப்மன் கில்
அணி: விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், சிவம் துபே
உத்தேச பிளேயிங் XI: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.




















