மேலும் அறிய
Bigg Boss Archana: இவங்களுக்கு இதே வேலையா போச்சு! மீண்டும் காதலருக்கு வரிந்து கட்டிய அர்ச்சனா!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா, அடிக்கடி தன்னுடைய காதலர் அருணுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
பிக்பாஸ் அருணுக்கு ஆதரவாக அர்ச்சனா போட்ட வீடியோ
1/5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரணம், கடந்த சீசனில் டைட்டில் வின்னராக இருந்த அர்ச்சனாவின் காதலர் என்பது தான்.
2/5

அடிக்கடி அருணுக்கு பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அநீதிகளுக்கு நியாயம் கேட்கிறேன் என வீடியோ வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் அர்ச்சனா. ஏற்கனவே, அருணுக்கு விஜய் சேதுபதி பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என கூறி வரிந்து கட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நடந்த புது பிரச்சனைக்காக அருணுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
3/5

இந்த வாரம், பிக்பாஸ் போட்டியாளர்களை லேபர் வேடம் போட்டுவைத்து அழகு பார்த்த நிலையில், அதில் அருண் பேசிய ஒரு கருத்துக்கு தீபக் உட்பட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த பிரச்னையை சுட்டி காட்டியுள்ள அர்ச்சனா, தீபக் பேசியதை விட்டு விட்டு அருண் பேசியதை மட்டும் டார்கெட் செய்து 40 நிமிடம் பேசியதாக தன்னுடைய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
4/5

ஒரு வீட்டில் நாம் குடும்பத்தோடு இருக்கும் போது, நாம் யாரையும் லேபர் என பிரித்து பார்ப்பது இல்லை. அனைவரும் சமம் தான். இந்த கருத்தை தான் அருண் முன்வைத்தார். பிக்பாஸ் பொறுத்தவரை கேம் விளையாடுவது தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்,.வேலை செய்வது அல்ல என்பதை தான் அருண் கூறினார்.
5/5

லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டது எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் பேசியதை மட்டுமே பெரிய பிரச்சனையாக பேசினார்கள். விஜய் சேதுபதியும் கேட்டும் போது தான் சொல்ல வந்த கருத்தை அவரால் தெளிவாக கூறமுடியவில்லை. அவர் பயந்து விட்டார். இதை வைத்தே 40 நிமிடம் விஜய் சேதுபதி பேசினார் என அர்ச்சனா குற்றம்சாட்டியுள்ளார். இதற்க்கு அர்ச்சனாவுக்கு சிலர் ஆதரவாக பேசினாலும், பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
Published at : 17 Dec 2024 09:30 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















