10th 12th CBSE Exam: மாணவர்களே… நாளை தொடங்கும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- இதெல்லாம் கட்டாயம்!
10th 12th CBSE Exam 2025: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கும் நிலையில், மாணவர்கள் என்ன செய்யலாம்? கூடாது?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
கண்காணிப்பாளர்களுக்கு நேரலையில் அறிவுறுத்தல்கள்
வரலாற்றிலேயே முதல் முறையாக தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், துணை மைய கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள், நகர ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, சிபிஎஸ்இ நேரடி ஒளிபரப்பை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நேரலை ஒளிபரப்பு இன்று (பிப்ரவரி 14) பிற்பகல் 2.30 மணி முதல் CBSE-ன் யூடியூப்சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது, இது இரண்டு மணி நேரம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
* பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
* பள்ளி ஐ.டி. கார்டும் முக்கியம் ஆகும்.
* அதேபோல மின்னணு உபகரணங்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: CBSE Hall Ticket: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
தேர்வு எப்போது? எப்படி?
நாளை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது. காலை 10.30 முதல் 1.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முனைவோருக்கான தாளுடன் முதல் தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மார்ச் 18ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: cbse.gov.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

