மேலும் அறிய
Jallikattu : சோழவந்தான் ஜல்லிக்கட்டு.. 1030 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்பு.. விறு விறு ஜல்லிக்கட்டு
பொதுமக்களின் பொழுபோக்கு நிகழ்வாக ஜல்லிகட்டு போட்டி இடையே டி.ஜே இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி
Source : whats app
அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
மதுரை ஜல்லிக்கட்டு 2025 போட்டி
மதுரை ஜல்லிக்கட்டு போட்டி 2025 தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என முக்கியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்த நாட்கள் நடைபெறும். இந்தாண்டு 2025-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது மூன்று இடங்களிலும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு அரங்கில் கடந்தவாரம் மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது. இந்நிலையில் இன்று மதுரை சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க- Munnar Double Decker Bus: மூணாறை சுற்றிப் பார்க்க டபுள் டக்கர் பேருந்து சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?
ஜல்லிக்கட்டை பார்வையிட்ட அமைச்சர்கள்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு மு பூமிநாதன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு நரேந்திரன் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் பார்வையிட்டனர்.
தங்கக்காசு, சைக்கிள், மிக்ஸி, மெத்தை - பரிசு
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1030 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்கக் காசு, சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் கண்டு ரசிக்க பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி தொகுத்து வழங்கிறார். பொதுமக்களின் பொழுபோக்கு நிகழ்வாக ஜல்லிகட்டு போட்டி இடையே டி.ஜே இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்றால் இதை செய்யுங்கள் - அமைச்சர் கே.என்.நேரு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்



















