Ajith Kumar: "இனி நாங்கதான்" கார் பந்தயம், பட ரிலீஸ், பத்மபூஷண்! உச்சகட்ட சந்தோஷத்தில் அஜித் ரசிகர்கள்!
அஜித்குமார் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றது, அஜித்குமார் படத்தின் வெளியீடு, அஜித்திற்கு பத்மபூஷண் விருது ஆகியவை என அடுத்தடுத்து மகிழ்ச்சியான விஷயங்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர் உள்பட பன்முகம் கொண்டவராக திகழ்கிறார்.
பத்மபூஷண் அஜித்:
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் முழுவதும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் வெளியான பிறகு இதுவரை எந்த படமும் வெளியாகாமல் உள்ளது. கடந்தாண்டு இறுதியில் விடாமுயற்சி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது படம் வெளியாகவில்லை. வரும் பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி படம் வெளியாக உள்ளது.
வெற்றி மேல் வெற்றி:
கார் பந்தய வீரரான அஜித்குமார் கடந்தாண்டு தனக்கென ஒரு பந்தய அணியை உருவாக்கினார். அந்த அணியுடன் துபாயில் பங்கேற்ற பந்தயத்தில் 3வது இடம் பிடித்து நாட்டிற்கே பெருமை சேர்த்தார். இது மிகப்பெரிய சாதனையாக கொண்டாடப்பட்டது. அஜித்தின் அணி கார் பந்தயத்தில் 3வது இடத்திற்கு வந்ததற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பது, அஜித் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றது என பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பொதுவெளியில் அவ்வளவு காணப்படாத அஜித் துபாயில் நடைபெற்ற பந்தயத்திற்கு பிறகு பேட்டி அளித்ததும், ரசிகர்கள் மீது தான் அளவில்லா அன்பு வைத்திருப்பதாகவும் கூறியதும் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுவர்தனுடன் மீண்டும் கூட்டணி:
2025ம் ஆண்டு பிறந்தது முதலே அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் சூழலில், அஜித்தை ஸ்டைல் ஐகானாக, கோலிவுட்டின் டானாக காட்டிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அஜித்தின் பில்லா, ஆரம்பம் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன் ஆவார்.
புத்தாண்டு பிறந்த ஒரு மாதத்திற்குள் அஜித்திற்கு ஒரே ஏறுமுகமாக இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், விடாமுயற்சி பட வெளியீட்டை கோலாகலமாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.





















