Republic Day 2025 LIVE: டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Republic Day 2025 LIVE Updates: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 76வது குடியரசு தின கொண்டாட்டத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் தேசிய கொடியை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றினார்.
கலைநிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் ஆளுநர், முதலமைச்சர்
சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் கண்டு களித்து வருகின்றனர்.
காவலர்களுக்கான காந்தியடிகள் பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறந்த காவலர்களுக்கான காந்தியடிகள் பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி! சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட அணிவகுப்பு
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். தற்போது அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார்.
டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

