Top 10 News: மத்திய அரசை அட்டாக் செய்த உதயநிதி, 70 பேர் பலி - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என்று Blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
விகடன் விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்" -ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
உதயநிதி அதிரடி
”அது Union பட்ஜெட் இல்ல, Useless பட்ஜெட். மோடியை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது என கலர் கலராக கதை விட்டுக் கொண்டிருக்கின்றனர்" - மத்திய அரசை கடுமையாக சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
விபத்தில் சிக்கிய யோகிபாபு
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி |அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மீது கார் ஏறியுள்ளது. வேறொரு காரில் யோகிபாபு பெங்களூரு புறப்பட்டார்.
டெல்லி ரயில் நிலைய துயரம் - காரணம் என்ன?
"12வது நடைமேடையில் இருந்து புறப்படும் பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் 16வது நடைமேடையில் இருந்து புறப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் 12ல் காத்திருந்தவர்கள், வெளியே இருந்து உள்ளே வருபவர்கள் என ஒட்டுமொத்த கூட்டமும் 16வது நடைமேடையை நோக்கி ஓடினர். கடும் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர் - 18 பேர் உயிரிழந்துள்ள கூட்ட நெரிசல் சம்பவத்தை, நேரில் பார்த்த ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலாளி பேட்டி
ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
டெல்லி ரயில் நிலைய கூப். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் வழங்கப்படும்- இந்திய ரயில்வே அறிவிப்பு. படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ₹2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சமும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் செயலி வாயிலாக தரிசன டிக்கெட்டுகள்
திருப்பதி கோயில் தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் செயலி மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்திய ஆந்திர அரசு. ‘மன மித்ரா' திட்டத்தின் மூலம் வாட்ஸ் அப் வாயிலாக பல சேவைகளை வழங்கி வரும் நிலையில், தரிசன டிக்கெட் திட்டம் விரைவில் முழு வீச்சில் வழங்கப்படும். அறை, ரயில் டிக்கெட் முன்பதிவு வசதிகளையும் அதில் இணைக்க அம்மாநில அரசு முடிவு
இந்திய மாணவர்களால் அமெரிக்காவுக்கு ₹69,000 கோடி வருவாய்!
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் அந்நாட்டுக்கு ஆண்டுதோறும் ₹69,000 கோடி வருவாய் கிடைப்பதாக அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்க கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் இந்திய மாணவ, மாணவியரை அந்த நாட்டு அரசு தக்க வைத்துக் கொள்வதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காங்கோ துப்பாக்கிச் சூடு - 70 பேர் பலி
ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற எம்-23 கிளர்ச்சியாளர்கள், காங்கோவின் புகாவு நகரை கைப்பற்றும் நோக்கில் அதனை முற்றுகையிட்டனர். அப்போது தேவாலயத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அங்கு பதுங்கியிருந்த காவலர்கள் உட்பட 70 சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடைசி பந்தில் த்ரில் வெற்றி
நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீகின் இரண்டாவது போட்டியில், பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 165 ரன்கள் என்ற இலக்கை எட்டி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





















