மேலும் அறிய
Advertisement
Big Boss 7 Tamil: ‘உங்க கூட என்னையும் பிளேயரா சேர்த்துக்கிட்டீங்க..’ - போட்டியாளர்களை வறுத்தெடுத்த கமல்!
பிக்பாஸ் போட்டியாளர்களிடம் “நீங்கள் எங்களையும் உங்க கூட பிளேயரா சேர்த்துக்கிட்டங்கன்னு தோனுது...” என சரமாரியாக கேள்வி கேட்ட கமல்ஹாசன்!
Big Boss 7 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒரு மாதம் கடந்த நிலையில் போட்டியில் அதிரடி திருப்பங்கள், கூச்சல், குழப்பம், சண்டை, சமரசம், அழுகை, வழக்கு என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்ததை விட புதிய கோணத்தில் 7வது சீசன் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்காக பிரதீப் வெளியேற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டில் அது பிரளயத்தையே ஏற்படுத்தியது. பெண் போட்டியாளர்கள் இரு கூட்டணியாக பிரிந்து சண்டைக்கு மல்லுக்கட்டினர். மாயா கூட்டணியும், விசித்ரா கூட்டணியும் சண்டையிட்டதில் கமல்ஹாசன் பெயரும் அடிப்பட்டது. பிரதீப் வெளியேற்றப்பட்டது கமல்ஹாசனின் முடிவு என பூர்ணிமாவும் மாயாவும் பேசினர்.
இந்த வாரம் சண்டையுடனே பிக்பாஸ் சீசன் சென்றிட, இன்று இரவு போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் என்ன பேச உள்ளார், அவர்களுக்கு எந்த மாதிரியான பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், மாயா, பூர்ணிமா, ஜோவிகா மற்றும் ஐஷூவை பார்த்து “ நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானா....அதிகாரம் கையில் இருந்த போது நீங்கள் என்ன பண்ணீங்க...சிகப்பு மஞ்சளா தெரிஞ்சது என்றால் என்ன மாலைக்கண்ணா, கொடுக்க மாட்டன்னு சொல்லி இருக்கலாமே...அது உங்கள் உரிமை தானே....நீங்கள் எங்களையும் உங்க கூட பிளேயரா சேர்த்துக்கிட்டங்கன்னு தோணுது...” என சரமாரியாக கேள்வி கேட்டு போட்டியாளர்களை வறுத்தெடுத்துள்ளார். கமல்ஹாசனின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் நான்கு பெண் போட்டியாளர்களும் திணறுகின்றனர்.
#Day41 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 11, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/QVMgaFytN6
அதேநேரம் அர்ச்சனா உற்சாகத்தில் குதிக்கிறார். இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் என்ன செய்தார்கள் என்பதை காட்டுவதற்காக குறும்படத்தை கமல் போட சொல்கிறார். இதனால் கலக்கத்தில் போட்டியாளர்கள் உள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பான சம்பவம் காத்திருப்பதாகக் கூறி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Big Boss 7 Tamil: பிரதீப் ஆண்டனியின் பிக்பாஸ் ரீ என்ட்ரி.. ரிவெஞ்ச் மோடில் விளையாடத் தயார் எனப் பதிவு!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion