RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMK
தமிழக அரசையும் , தமிழ் நாட்டின் கல்வி முறையையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஆளு நர் ஆர்.என்.ரவி திடீரென தமிழ் நாடு கல்வியில் சிறந்து விளங்குவதாக கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
தமிழ் நாட்டின் ஆளு நராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே தமிழக அரசுக்கும் அவருக்கும் ஏழாம் பொறுத்தமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசை விமர்சிப்பது, பாஜகவிற்கு ஆதரவான கருத்தை பதிவு செய்வது, பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழாக்களுக்கு சென்றால் தமிழ் நாடு அரசை எதாவது குறை கூறி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக அரசும் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் வருகிறது. அண்மையில் கூட தமிழக சட்டசபையில் அரசின் உரையை வாசிக்காமல் வெளியேறினார். முதலமைச்சரையும் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தமிழ் நாடு அரசையில், தமிழக கல்வி முறையையும் ஆளுநர் ஆர் என் ரவி பாராட்டி பேசி இருப்பது கவனம் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக அவர் பேசுகையில், “கல்வி கலாச்சாரம் விருந்தோம்பல் என அனைத்திலும் தமிழ் நாடு சிறந்து விளங்குகிறது. பல்வேறு மாநில மக்கள் இங்கே வசிப்பதால் தமிழ் நாடு ஒரு மினி பாரதமாகவே திகழ்கிறது.
உயர் கல்விக்காக வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். தலைநகர் டெல்லியில் கூட பாதுகாப்பான சூழல் இல்லை. இங்கே பாதுகாப்பான சூழல் நிலவுவதால் தமிழ் நாட்டை தேர்வு செய்கின்றனர். ”என்று கூறி தமிழ் நாட்டை பாராட்டியிருக்கிறர் ஆளுநர் ரவி.





















