மேலும் அறிய

இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா? 

பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி: அடுத்தடுத்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் திருச்சி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா? 

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் பூங்காக்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கி இருக்காங்க. பற்றாக்குறை பட்ஜெட்தான்... நிதி இல்லைதான்... பற்றாக்குறை இருந்தும், புதிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய பூங்காக்கள், பாரம்பரிய விளக்குகள், மரங்கள் நடுதல் போன்ற பணிகளுக்காக ரூ.44 கோடியை ஒதுக்கிய மேயர் மு. அன்பழகன் சிஎஸ்ஆர் நிதி மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது, தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்தி, இந்த திட்டங்களை நிறைவேற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளதாம்.

குறிப்பாக, பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள அய்யப்பன் கோயில் எதிரே திறந்தவெளி இடத்தை, வெஸ்ட்ரி பள்ளி மற்றும் அலெக்சாண்ட்ரியா சாலை வரை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகர் ரெட்டை வாய்க்கால் பகுதியில், சாலை ஓரங்களில் பூங்காக்கள் அமைக்க இருக்காங்க. மக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதைகள், திருச்சி சர்வதேச விமான நிலையம் - பீமா நகர் நீதிமன்றம் செல்லும் சாலையில், அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் சென்று வருகின்றனர். அதனால், அந்த சாலையில் பாரம்பரிய தோற்றமுடைய எல்இடி விளக்குகள் பொருத்த முடிவு செய்து இருக்காங்க.

ஏற்கனவே, திருவானைக்கோவில் சென்னை ட்ரங்க் சாலையில் உள்ள விளக்குகள் போல, இந்த விளக்குகள் இருக்குமாம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது; "புதிய விளக்குகள் நகரத்தின் அழகை மேம்படுத்தும். அதே நேரத்தில், வெளிச்சம் ஒரே மாதிரி இருக்கும். இது பார்வையாளர்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும்" என்றனர். மேலும், 10,000 தெரு விளக்குகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 20 வாட் எல்இடி விளக்குகளுக்கு பதிலாக, 40 வாட் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டமாக, ஓடத்துறை சாலை மற்றும் அம்மா மண்டபம் பகுதிகளில் ரூ. 5 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பஞ்சப்பூர் பளபளப்பாகும் போது சிட்டியை மட்டும் விட்டுவிடுவோமா என்பது போல் மாநகராட்சி பட்ஜெட் நகரை அழகுப்படுத்த வந்திடுச்சு. மாநகராட்சி பட்ஜெட்டில் உள்ள சில முக்கிய திட்டங்கள் பற்றி பார்ப்போம். 10,000 தெரு விளக்குகளை 20வாட்ஸ் இருந்து 40 வாட்ஸ் எல்இடி ஆக மாற்ற போறாங்க.

வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகரில் பூங்காக்கள் அமைக்க ரூ. 10.5 கோடி ஒதுக்கி இருக்காங்க. காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டம் (ஓடத்துறை & அம்மா மண்டபம்) – ரூ.15 கோடி,  குடியிருப்பு பகுதிகளில் 3,450 புதிய எல்இடி விளக்குகள் பொருத்த ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிச்சு இருக்காங்க.

ராயல் ரோடு, கண்டோன்மென்ட் பகுதிகளில் சாலை ஓரங்களில் பொது இடங்களை மேம்படுத்துதல் ரூ.10 கோடி என்று நிதி ஒதுக்கீடு செய்து வெளியாகி உள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. திருச்சி இப்போ திரும்பும் இடமெல்லாம் அழகு திருச்சியாக மாற போகுது. 

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget