மேலும் அறிய
தமிழகத்தை உலுக்கிய மரக்காணம் கலவரம் ; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி... 20 பேரின் நிலை என்ன தெரியுமா ?
கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 20 பேரை விடுதலை செய்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார்.

மரக்காணம் கலவரம் வழக்கில் பாமகவினர் 20 பேர் விடுதலை
Source : ABP NADU
விழுப்புரம் : கடந்த 13ஆம் ஆண்டு மரக்காணம் கலவர வழக்கில் 20 பேரை விடுதலை செய்து விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி உத்தரவு.
மரக்காணம் கலவர வழக்கு
கடந்த 2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் பாமக சார்பில் சித்திரை பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு பெருவிழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பா.ம.க-வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மரக்காணம் வழியே சென்றபோது, அவர்களுக்கும் பட்டியலின சமூக மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில் திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து முடிந்து குற்றம்சாட்ட பட்ட தலித் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், இக்கலவரம் தொடர்பாக சுமார் 200 பா.ம.க-வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில் சுமார் 166 பேர் விடுவிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், மாணிக்கம், கலையரசன், குமரன் உள்ளிட்ட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரம் தொடர்பான வழக்கு, திண்டிவனம் நீதிமன்றத்தில் 2-வது கூடுதல் அமர்வு முன்பு 12 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. அந்த 34 பேரில் இருந்து 14 பேர் விடுவிக்கப்பட்டு, 20 நபர்கள் மீது மட்டும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து (22.04.2022) அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரக்காணம் கலவரம் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பா.ம.க-வைச் சேர்ந்த 20 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்.
இந்த கலவரத்தில் கடலூர் மாவட்டம் வல்லம்படுகையை சார்ந்த பாமக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கலையரசன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், சங்கர், குமார், சுப்பிரமணி, சுதாகர், ஆனந்த், ராமதாஸ், செழியன் சண்முகம், ராஜசேகர், சின்னதம்பி, ராஜாராம், உள்ளிட்ட 34 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான இருபது பேரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான 34 பேரில்ஏற்கனவே 14பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 20 பேரை விடுதலை செய்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
இந்தியா





















