ஸ்ருதி நாராயணனை விடுங்க.. அனுஷ்கா சர்மா ஆடிஷன் வீடியோ பாத்துருக்கீங்களா? இதோ பாருங்க
Anushka Sharma Audition Video: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் ஆடிஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

Anushka Sharma Audition Video: திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்களது நடிப்புத் திறமையை காட்டி தங்களது வாய்ப்பை பெறுகிறார்கள். புதுமுக கலைஞர்கள் தங்களது திறமையை காட்டுவதற்காகவே நடத்தப்படுகிறது ஆடிஷன்.
திரைப்பட ஆடிஷன்:
இ்ந்த ஆடிஷனை சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவறாக பயன்படுத்தி நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணனின் ஆடிஷன் வீடியோ என்ற பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோ ஏஐ-யில் உருவாக்கப்பட்டது என்று ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
அனுஷ்கா சர்மா ஆடிஷன் வீடியோ:
இந்த சூழலில், பிரபல பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவின் ஆடிஷன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 36 வயதான அனுஷ்கா சர்மா 2008ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் இவர் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை பெங்களூரிலே முடித்துள்ளார்.
நடிப்பு வாய்ப்பிற்காக அவர் ஆடிஷனில் தன்னுடன் பெயர், வயது, உயரம் ஆகிய விவரம் கொண்ட பலகையுடன் நிற்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அனுஷ்கா சர்மா தனது பெயர் அனுஷ்கா சர்மா என்றும், தான் பெங்களூரில் இருந்து வருவதாகவும், தன்னுடைய உயரம் 5.2 அடி உயரம் என்றும் கூறுகிறார். பின்னர், தன்னுடைய சிரிப்புடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.
ராணுவ குடும்பம், கோலியின் மனைவி:
அனுஷ்கா சர்மாவின் தந்தை ராணுவத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் திரைப்பட தயாரிப்பாளர் கர்னேஷ் சர்மா. அவரும் இந்திய கடற்படையில் பணியாற்றியவர். ராணுவ குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த அனுஷ்கா சர்மா தன்னுடைய முதல் படத்திலே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார்.
ஷாருக்கான், ரன்வீர் சிங், அமீர்கான், சல்மான்கான், ரன்பீர் கபூர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலியை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.- அனுஷ்கா சர்மா கடந்த 2022ம் ஆண்டுக்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார். அவர் கோலியையும், தனது குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

