IPL 2025 KKR vs LSG : பாதுக்காப்பு பிரச்னை.. மாறிய முக்கிய ஐபிஎல் போட்டியின் தேதி..முழு காரணம் என்ன?
கொல்கத்தாவில் ராம நவமி"விழாக்கள் காரணமாக நகரம் முழுவதும் காவலர்கள் பாதுக்காப்பது பணியில் நிறுத்துப்படுவதால் போட்டியன்று பாதுக்காப்பு வழங்குவது கடினம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

ராமநவமி பண்டிகையை முன்னிட்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை ஏப்ரல் 6 பதிலாக ஏப்ரல் 8 நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
தற்போதுள்ள போட்டி அட்டவணைக்கு மாறாக இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெறும் என்றாலும், முன்னர் வந்த தகவலின்படி போட்டியானது குவஹாத்தியில் அல்லாமல் கொல்கத்தாவிலேயே நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் ராம நவமி"விழாக்கள் காரணமாக நகரம் முழுவதும் காவலர்கள் பாதுக்காப்பது பணியில் நிறுத்துப்படுவதால் போட்டியன்று பாதுக்காப்பு வழங்குவது கடினம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கொல்கத்தா காவல்துறை வங்காள கிரிக்கெட் சங்கத்திற்கு (சிஏபி) விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து போட்டியின் தேதி மாற்றம் குறித்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று பிசிசிஐ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. "போட்டியை செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2025 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு மாற்ற அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர், மேலும் கோரிக்கை அதற்கேற்ப ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு வைத்த கோரிக்கை என்ன?
வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவர் சினேகாஷிஷ் கங்குலி முன்னதாக PTI இடம், போட்டியை மறுபரிசீலனை செய்யுமாறு BCCI-யிடம் கோரியதாகத் தெரிவித்திருந்தார்.
"போட்டியை மறுபரிசீலனை செய்ய பிசிசிஐ-க்கு நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம், ஆனால் ர் நகரில் ஆட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை, இப்போது அது குவஹாத்திக்கு மாற்றப்படும் என்று கேள்விப்படுகிறேன்" என்று கங்குலி மார்ச் 20 அன்று கூறியிருந்தார்.
இரண்டு போட்டிகள்:
மீதமுள்ள அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏப்ரல் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெறும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது - ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மட்டும் அன்றைய தேதியில் நடைப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
“செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, டபுள் ஹெட்டர் ஆட்ட நாளாக இருக்கும், இதில் மதியம் கொல்கத்தாவில் KKR vs LSG போட்டியும், அதைத் தொடர்ந்து மாலையில் நியூ சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை (போட்டி எண். 22) போட்டிகள் நடைப்பெறும் என்று ஐபிஎல் கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















