விளைநிலங்களை தொடர்ந்து, கடலிலும் ஓஎன்ஜிசி நிறுவனம் அட்டூழியம்... மீனவர்கள் கதறல்...
சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு மற்றும் வலைகள் ஓஎன்ஜிசி நிறுவனம் சேதப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் கடலில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு மற்றும் வலைகள் ஓஎன்ஜிசி நிறுவனம் சேதப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
பழையார் மீனவர் கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பழையார் மீனவர் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசை படகுகளும், ஆயிரக்கணக்கான பைபர் படகுகளை பயன்படுத்தி சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழிலையை மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது.
ஆண்டின் 5 மாதம் மட்டுமே தொழில்
இவர்கள் ஆண்டில் ஏழு மாத காலம் மழை, புயல், கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தால் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கி விடுகின்றனர். மீதமுள்ள ஓரிரு மாதங்களில் மட்டுமே மீன்பிடி தொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆய்வு
இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடலில் குருடு ஆயில் எடுப்பதற்காக ஆய்வு செய்வதற்காக நங்கூரங்களை கடலின் உள்ளே ஆங்காங்கே போட்டுள்ளனர். இதனை முறையாக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்காமலும், எவ்வித எச்சரிக்கை சின்னங்களும் வைக்கமால் கடலில் நங்கூரங்களை போட்டு வைத்துள்ளனர். இதனால் கடலில் மீன்பிடி தொழில் ஈடுப்பட்டுள்ள மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த விசைப்படகு
மேலும் பழையாரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விசை படகில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, ஓஎன்ஜிசி நிறுவனம் மீனவர்களுக்கு தெரிவிக்காமல் கடலில் போட்டுள்ள நங்கூரத்தில் படகு மற்றும் வலைகள் சிக்கி சேதமாகி நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்துள்ளனர். இதனை அறிந்த அருகில் இருந்த சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றி அழைத்து வந்துள்ளனர். மேலும் இதனால் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி படகு மட்டும் வலைகள் சேதமடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய அரசுக்கு கண்டனம்
நடுக்கடலில் ஆய்வு செய்யாமல், மீனவர் கிராமங்களில் ஒட்டி கரையோரம் ஆய்வு செய்ய அனுமதித்த மத்திய அரசை மீனவர்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், தொடர்ந்து பழையார் மீனவ கிராமங்களில் இது போன்ற பாதிப்புகளால் மீனவர்கள் பாதிக்கப்படுவதால் அதற்குண்டான நஷ்ட ஈடு உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாரத்தை அழிக்கக் கூடிய வகையில் ஆய்வுக்கு அனுமதித்து உள்ளதாகவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் இருந்து வருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை மத்திய அரசு எடுக்கவில்லை என்றால் கால வரையற்ற உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

