Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
பிரபாகரனுடன் சீமான் இருப்பதுபோன்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அதே போட்டோவில், சீமானுடன் பல பிரபலங்களை இணைத்து வெளியிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிரபாகரனுடன் தனக்கு நெருக்கமான நட்பு இருப்பதாக கூறி, புகைப்படங்களையும் ஏற்கனவே வெளியிட்டிருந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் வெளியிட்ட புகைப்படம் தான் எடிட் செய்தது என சமீபத்தில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பதிலளித்த சீமான், பல வருடங்கள் முன்பே அந்த புகைப்படம் வெளியானதாகவும், தற்போது ஏன் அதுபற்றி அவதூறு பரப்ப வேண்டும் எனவும், ஆதாரம் இருக்கிறதா எனவும் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ராஜ்குமார், ஆதாரத்திற்கே ஆதாரம் தேவையா என கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ட்ரோல் செய்து சீமானை பொளந்துகட்டும் நெட்டிசன்கள்
இந்த பிரச்னை ஒருபுறமிருக்க, நெட்டிசன்களை பற்றி கேட்க வேண்டுமா.? அவர்கள் சீமானின் அந்த போட்டோவில் பல்வேறு பிரபலங்களை இணைத்து வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஒரு சமூக வலைதள பதிவில் சீமானுடன் பேட்மேனை இணைந்து வெளியிட்டுள்ளனர்.
மற்றொரு பதிவில், சீமானுடன் நடிகர் விஜய் இருப்பதுபோன்று எடிட் செய்து வெளியிட்டு ட்ரோல் செய்துள்ளனர்.
மற்றொரு பதிவில், சீமானுடன் சத்குரு இருப்பது போலவும், பாப் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இருப்பது போலவும், சீமானுடன் சீமானே இருப்பது போலவும் பதிவிட்டதோடு, வேறு யாரை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளுங்கள் என்பது போல, ஒரு போட்டோவில் சீமான் மட்டும் இருப்பது போல எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதேபோல், அந்த போட்டோ எடிட் செய்ததுதான் என்பதை விளக்கும் வகையில், பிரபாகரனுடன் திருமாவளவன் இருக்கும் புகைப்படத்தையும், திருமாவளவனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தையும் போட்டு, அதில் திருமாவளவனைவிட சீமான் உயரம் குறைவாக இருப்பதையும், பிரபாகரன் உயரத்திற்கு திருமாவளவன் இருப்பதையும் சுட்டிக்காட்டி, உயரத்தை மறந்துவிட்டு எடிட் செய்துவிட்டீர்களே என கேள்வி எழுப்பி ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீமான் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை என்றாகிவிட்டது. அதனால், சமூக வலைதளங்களில் அதிக அளவில் ட்ரோல் செய்யப்படுபவரும் அவர்தன். அதில் இது தனி ரகமாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

