இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
ஸ்க்ரப் டைபஸ் ( உண்ணி காய்ச்சல் )என்ற பாக்டீரியா தொற்று தமிழ்நாட்டில் அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன.

ரிக்கட்ஸியா எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள் கடிப்பதால் பலருக்கு தொற்று நோய் ஏற்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஸ்க்ரப் டைபஸ் ( உண்ணி காய்ச்சல் )என்ற பாக்டீரியா தொற்று தமிழ்நாட்டில் அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன.
"ரிக்கட்ஸியா" எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்படும் எனவும், இத்தொற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஸ்க்ரப் டைபஸ் ( உண்ணி காய்ச்சல் )என்ற பாக்டீரியா தொற்று தமிழ்நாட்டில் அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 23, 2025
"ரிக்கட்ஸியா" எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்படும் எனவும், இத்தொற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவியுள்ளதாகவும்… pic.twitter.com/RtSBIFSbtL
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரே வாரத்தில் 8 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களாக சுமார் 600 பேர் இத்தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மாநிலம் முழுவதும் பரவி வரும் இத்தொற்றுப் பரவலைத் தடுக்கவும், இத்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுப்பதுடன், இத்தொற்றிற்கான மருந்துகள் உரிய அளவில் இருப்பு உள்ளதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

