மேலும் அறிய

Myanmar Earthquake: மியான்மர் நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு! தாய்லாந்து, சீனா நிலை என்ன?

மியான்மரின் பெரும்பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாலங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன.

 

மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழதவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தாய்லாந்திலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளதாக இராணுவ மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

மத்திய மியான்மரின் மண்டலே நகரை வெள்ளிக்கிழமை தாக்கிய நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்திலும் பலத்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.

மியான்மரின் பெரும்பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாலங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன. இந்த பேரழிவு தாய்லாந்து வரை பரவியது. அங்கு பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து பலரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளது.

குறிப்பாக, மியான்மரைத் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையம் மத்திய மியான்மரில் உள்ள சகாயிங் அருகே இருந்ததாகக் கூறப்படுகிறது. மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று 6.4 ரிக்டர் அளவில் பதிவானதாகக் கூறப்படுகிறது.

 

மியான்மர் இராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லைங், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். அவர் 'அவசரநிலை'யையும் அறிவித்திருந்தார். மியான்மரில் மண்டலே நகரம் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக தற்போது உள்ளது.

குறிப்பாக, தலைநகர் நய்பிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையிலும், மண்டலேயில் உள்ள ஒரு மசூதியிலும், மக்கள் உள்ளே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்ததாலும், மண்டலே பல்கலைக்கழக கட்டிடம் தீப்பிடித்ததாலும் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக தாய்லாந்தில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் 30 மாடி அரசு கட்டிடம் இடிந்து விழுந்தது உட்பட மூன்று கட்டுமான இடங்களில் சுமார் 10 பேர் இறந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும், 101 பேர் காணாமல் போனதாகவும் பாங்காக் துணை ஆளுநர் தவிதா கமோல்வேஜ் தெரிவித்துள்ளார்.

பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் பசாகோர்ன் பூன்யாலக் கூறுகையில், ”நிலநடுக்கம் பாங்காக்கிலும், சியாங் ராய், ஃபிரே, மே ஹாங் சன், லாம்பாங், சாய் நாட், லாம்புன், லோய், சமுத் சகோன், சியாங் மாய் மற்றும் கம்பெங் பெட் உள்ளிட்ட 10 மாகாணங்களிலும் சேதத்தை ஏற்படுத்தியது” எனத் தெரிவித்தார்.

மியான்மரில் வெள்ளிக்கிழமை பாங்காக் உட்பட நாட்டின் பல பகுதிகளை உலுக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சாத்தியமான பின்னதிர்வுகள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பொதுமக்களை அமைதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, மியான்மர் மக்களுக்கு அவசர உதவிப்பொருட்களை மனிதாபிமான உதவியின் முதல் தவணையாக 15 டன்களை இந்தியா இன்று அனுப்பியது.

அதில், நிவாரணப் பொருட்கள், சாப்பாடுகள், போர்வைகள் உள்ளிட்டவையும் அடங்கும். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதையடுத்து சீனாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget