மேலும் அறிய

TNTET 2025: ''ஆசிரியர்களை ஏமாற்றும் அரசு'' இந்த ஆண்டும் டெட் தேர்வு கிடையாதா? குமுறும் தேர்வர்கள்!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணியில் சேர முறையே ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட ஆண்டு அட்டவணையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்று ஆசிரியர் பணிக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணியில் சேர முறையே ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான தேர்வுகளைப் நடத்தி வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய பணிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

மாநில தகுதித் தேர்வு (TNSET)

அதேபோல, அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணிகளில் சேர, மாநில தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் பணிகளில் சேர நடத்தப்படும் தேர்வு விவரங்கள், அதற்கான அறிவிக்கைகள், அறிவிக்கை, தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை வெளியிடப்படும்.

இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதில், 7,735 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

7,735 பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணை பேராசிரியர், உதவி நூலகர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 232 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சட்ட உதவி பேராசிரியர், சட்ட இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வின் மூலம் 132 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 4000 பணி இடங்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதேபோல, சிஎம்ஆர்எஃப் (CMRF) எனப்படும் முதலமைச்சருக்கான ஆய்வு உதவித்தொகைக்கான தேர்வு குறித்த அறிவிக்கை, ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் 180 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 1205 பணி இடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன. அதேபோல வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணியிடங்கள் 51 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளன. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) அறிவிப்பு இல்லை

எனினும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பன குறித்த விவரங்கள் இந்த அட்டவணையில் வெளியாகவில்லை.

ஆண்டுதோறும் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டிய நிலையில், கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்​தப்​பட்​டது. அதன்​பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்லை.

TNTET 2025: ''ஆசிரியர்களை ஏமாற்றும் அரசு'' இந்த ஆண்டும் டெட் தேர்வு கிடையாதா? குமுறும் தேர்வர்கள்!

அறிவிப்பு என்னவானது?

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிக்கையில் 2024 ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எதிர்பாராத விதமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல், தகுதித் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் தேர்வு இதுவரை நடத்தப்படவில்லை. 2024 முடிந்து 2025 தொடங்கிவிட்டது. புத்தாண்டின் முதல் மாதம் விரைவில் முடிய உள்ள நிலையில், இன்னும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/ 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
PG படிக்க ஆசையா? புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு நுழைவுத் தேர்வு அறிவிப்பு!
PG படிக்க ஆசையா? புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு நுழைவுத் தேர்வு அறிவிப்பு!

வீடியோ

அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Embed widget