Crime: வீடு புகுந்து விமான பணிப்பெண் கொலை...லாக் அப்பில் குற்றவாளி எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?
மும்பையில் விமான பணிப்பெண்ணை வீடு புகுந்து கொலை செய்தவர் காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Crime: மும்பையில் விமான பணிப்பெண்ணை வீடு புகுந்து கொலை செய்தவர் காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொலை செய்யப்பட்ட பெண்:
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூபால் ஆக்ரே (25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் விமான பணிப்பெண்ணாக பயிற்சி பெற மும்பைக்கு வந்திருந்தார். அங்கு அந்தேரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கை மற்றும் அவரது ஆண் நண்பருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் ரூபால் ஆக்ரே மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அந்த நேரத்தில், தூய்மை பணியாளர் விக்ரம் அத்வால் செப்டம்பர் 3ஆம் தேதி காலை 11 மணியளவில் ரூபேல்லின் வீட்டிற்கு குப்பை எடுப்பதற்காக சென்றிருக்கிறார். வீட்டில் ரூபேல் மட்டும் தனியாக இருப்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டு உள்ளே பாத்ரூம் பைப்பில் கசிவு இருப்பதாகக் கூறி அதைப் பார்க்கும்படி கூறியிருக்கிறார்.
ரூபேல் பாத்ரூம்மிற்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து விக்ரம் அத்வாலும் சென்றிருக்கிறார். பாத்ரூம்குள், ரூபோல் சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார் விக்ரம் அத்வால். ஆனால், அதனை தடுக்க ரூபேல் முயற்சித்திருக்கிறார். இதனை அடுத்து, ரூபேல் விக்ரமுடன் போராடியபோது விக்ரமின் முகம் மற்றும் தலையில் அவர் தாக்கியுள்ளார். அப்போது, விக்ரம் ரூபேலின் தலைமுடியை பின்புறமாக இழுத்து, கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார் விக்ரம் அகர்வால். பின்பு அவரது முகத்தில் இருந்த காயம், சட்டையில் இருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி:
இதனை அடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தபோது பதில் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகத்தில் இளம்பெண்ணின் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கூறினர். இதனை அடுத்து, அவரது நண்பர்கள் அந்தேரி நகரில் இருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீடு இருக்கும் வளாக பகுதியில் தூய்மை பணியாளராக இருந்த விக்ரம் அத்வால் (40) என்பவரை கைது செய்தனர்.
இதனை அடுத்து, அந்தேரியில் உள்ள காவல் நிலையத்தில் விக்ரம் வைக்கப்பட்டு இருந்தார். அவர் சிறையில் இருந்தபோது நேற்று இரவில் தான் அணிந்திருந்த பேண்ட்டை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்ரம் தற்கொலை செய்து கொண்டது காலையில் தான் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளி கடந்த இரண்டு நாட்களாக மிகவும் அமைதியாக இருந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை நினைத்து மிகவும் கவலைப்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.