மேலும் அறிய

Jana Nayagan Release: விஜய்யின் கடைசி திரைப்படம்... வெளியீடு எப்போது? தேதி அறிவிப்பு!

Jana Nayagan Release Date: நடிகர் விஜய் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் நடிக்கும் ஜனநாயகன்:

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 69-பது படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டது.இந்தப் படம் அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது போல இருபதாக ஏற்கனவே வெளியிட்ட போஸ்டர்களின் மூலம் தெரிவதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதில், விஜய் லியோ, GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது,  ரசிகர்களுக்கு மத்தியில், வண்டி மீது ஏறி நின்று ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானது. ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை கொண்டாடினர். அதுபோலவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இருந்தது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன. ஏனெனில், இந்தப் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.

 எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் படத்தை  கே.வி. என். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிரார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். 

 

’ஜனநாயகன்’ பொங்கல் 2026

விஜய்யின் அரசியல் வருகை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், அவர் நடிப்பில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் வழங்கியிருக்கிறது. விஜய்-யின் ப்ரசன்ஸை கடைசியாக ஒருமுறை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசியல் நிகழ்வுகளில் விஜய்யின் பேச்சு, அவரின் ரியாக்சன் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் வீடியோவாக பகிர்ந்தும் வருகின்றனர். சமூக கருத்துக்களை வணிக ரீதியாக ஆக்ஷன் படமாக சொல்வதில் கில்லாடியான எச்.வினோத், விஜய்யின் இந்த கடைசி படத்தை வலுவான திரைக்கதையுடன் அரசியல் களத்தில் நிகழும் கதையை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யும் அரசியல் பணிகளில் தீவிரமாக இருப்பதால், இந்தப் படத்தில் அவரது அரசியல் பயணத்திற்கு உதவுவதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படம் 2026- ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்கள் ‘இது தளபதி பொங்கல்’ என கொண்டாடி வருகின்றனர். 2026-ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பே, ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget