Gold Rate Decreased: தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து மக்களை கவலைக்குள்ளாக்கிய தங்கத்தின் விலை, தற்போது 4-வது நாளாக விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா.?

தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 4 நாட்களில், தங்கத்தின் விலை 760 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை மறுபடியும் ஏறுமுகம் காண்பதற்கு முன் பொதுமக்கள் முந்திக்கொள்ள வேண்டும்.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன.?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீப காலமா ஏறுமுகத்திலேயே இருந்த தங்கம் விலை, தற்போது 4-வது நாளாக குறைந்துள்ளது. கடந்த 20-ம் தேதி, கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை, புதிய வரலாற்று உச்சமாக 8,310 ரூபாயை எட்டியது. அதன்படி, ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, புதிய உச்ச விலையான 66,480 ரூபாயை எட்டியது.
அதன்பின்னர், கடந்த 21-ம் தேதி கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 66,160 ரூபாய்க்கு விற்பனையானது. அதற்கு அடுத்த நாளில், அதாவது 22-ம் தேதி கிராமிற்கு மீண்டும் 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,230 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 320 குறைந்து, சவரன் 65,840-க்கும் விற்பனையாது.
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதே விலையில் நீடித்த தங்கத்தின் விலை, இன்று(24.03.25) கிராமிற்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,215 ரூபாய்க்கு, ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் 65,720 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
3 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி
இந்நிலையில், வெள்ளியின் விலை 3-வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. கடந்த 20-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாது. பின்னர், 21-ம் கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், 22-ம் தேதி மீண்டும் 2 ரூபாய் குறைந்த வெள்ளியின் விலை, கிராமிற்கு 110 ரூபாயாக இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாது. தொடர்ந்து, நேற்றும், இன்றும் வெள்ளி அதே விலையில், அதாவது கிராமிற்கு 110 ரூபாயாக நீடித்து வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளதால், மீண்டும் ஏறுமுகத்திற்கு செல்லும் முன், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

