மீண்டும் உயரும் சுங்கக்கட்டணம்.. செங்கல்பட்டு சுங்கச்சாவடிக்கு இல்லையா End.. எவ்வளவு ரூபாய் உயர்கிறது ?
Toll Plaza Price: வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களால் தொடர்ந்து, விமர்சிக்கப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி கட்டணம் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர உள்ளது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு
மத்திய அரசாங்கம் பராமரித்து வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சுங்கச்சாவடி வசூலிக்க கூடாது என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து, வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதியதாக, 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. வருடத்திற்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது.
எவ்வளவு ரூபாய் உயர்கிறது ?
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 தேதி முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
பரனூர் சுங்கச்சாவடி Paranur Toll Gate
தாம்பரம்- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மொத்தம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சர்ச்சைக்குரிய பரனூர் சுங்கச்சாவடி
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி எப்போதுமே, சர்ச்சைக்குரிய சுங்கச்சாவடியாக இருந்து வருகிறது. பரனூர் சுங்கச்சாவடியில் மீண்டும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பரனூர் சுங்கச்சாவடி விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக பல்வேறு அமைப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மீண்டும் பரம சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப்களுக்கு 75 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வாகனங்களுக்கு 25 ரூபாய் வரை கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மற்றொரு சுங்கச்சாவடியான ஆத்தூர் சுங்கச்சாவடியிலும், ஏப்ரல் மாதம் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.





















