Salem Traffic Change: மக்களே உஷார்... சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Salem Traffic Diversion: எல்லைபிடாரியம்மன் திருக்கோவில் திருவிழா 25 ஆம் தேதி (இன்று) முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான எல்லைபிடாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அருள்மிகு ஸ்ரீ எல்லைபிடாரியம்மன் திருக்கோவில் திருவிழா 25 ஆம் தேதி (இன்று) முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்-1.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து, அஸ்தம்பட்டி வழியாக ஐந்து ரோடு, ஜங்சன், அடிவாரம் மற்றும் கன்னங்குறிச்சி செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்.
- பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு அடிவாரம் மற்றும் கன்னங்குறிச்சி செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு சந்திப்பு வலது புறம் திரும்பி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்றடையலாம்.
- பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக ஜங்சன் செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் வழிதடம் மாற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா, 4 ரோடு ராமகிருஷ்ணா ரோடு சந்திப்பு வழியாக இடது புறம் திரும்பி ஜங்சன் சென்றடையலாம்.
போக்குவரத்து மாற்றம்-2.
ஜங்சன், ஐந்து ரோடு, அடிவாரம் மற்றும் கன்னங்குறிச்சி ஆகிய இடங்களில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றடையும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்.
- ஜங்சன், ஐந்து ரோட்டிலிருந்து, அஸ்தம்பட்டி வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் ஜங்சனில் இருந்து ஐந்து ரோடு, ராமகிருஷ்ணா ரோடு சந்திப்பு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக மணக்காடு ரோடு, பிள்ளையார் நகர் சந்திப்பு, சுந்தர்லாட்ஜ் வந்து மேம்பாலம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடையலாம்.
- ஏற்காடு அடிவாரத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக மணக்காடு ரோடு, பிள்ளையார் நகர் சந்திப்பு, சுந்தர்லாட்ஜ் மேம்பாலம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடையலாம்.
- கன்னங்குறிச்சியிலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் மணக்காடு ரோடு, பிள்ளையார் நகர் சந்திப்பு சுந்தர்லாட்ஜ் மேம்பாலம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடையலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை மேற்கொண்டு சேலம் மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

