(Source: ECI/ABP News/ABP Majha)
கஞ்சா அரேஞ்ஜ் பண்றேன் என மெசேஜ்.. ஷாருக் மகன் வழக்கில், ஜோக் அடித்ததாக நடிகை வாக்குமூலம்..
ஆர்யன்கானுக்குத் தான் போதைப் பொருள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அனன்யா பாண்டே முழுவதுமாக மறுத்துள்ளார்.
மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் உபயோகித்த வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்று நடிகர் அனன்யா பாண்டேவை விசாரித்தது. ஆர்யன்கானுக்குத் தான் போதைப் பொருள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அனன்யா பாண்டே முழுவதுமாக மறுத்துள்ளார்.
அனன்யா பாண்டே இந்த விசாரணையில் எப்படி?
மும்பை சொகுசுக் கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தொடர்ந்து விசாரணையில் உள்ளார். இதற்கிடையே கைதின்போது ஆர்யன் கானின் போனை கைப்பற்றிய காவல்துறை அவரது போனில் போதைப் பொருள் வாங்கியது தொடர்பான உரையாடல்கள் இருப்பதாகத் தெரிவித்தது. 2018-19 காலக்கட்டத்தில் நடிகர் அனன்யா பாண்டேவுடன் ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பான மொபைல் உரையாடலில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் அதில் இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்திருந்தது. இதையடுத்து அனன்யா பாண்டேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் அவர் தான் எந்தவித போதைப்பொருளும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் யாருக்கும் சப்ளை செய்யவும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ரேவ் பார்டி நடைபெற உள்ளதாகவும் இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்த உள்ளதாகவும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மாறுவேடத்தில் சொகுசு கப்பலில் ஏறிய என்சிபி அதிகாரிகள், அங்கு ம் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதை உறுதி செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனுத் தாக்கல் செய்திருந்தார்.ஜாமீன் மனு மீதான உத்தரவை அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அக். 15 தொடங்கி அக். 19 வரை அடுத்த நான்கு நாட்கள் துர்கா பூஜை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். இதனால் வழக்கு விசாரணையை அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த விசாரணை முடிந்ததும் தனது தாய் கௌரியுடனும் தந்தை ஷாருக்கானுடனும் விடியோ காலில் பேசியிருக்கிறார் ஆர்யன் கான். ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.