மேலும் அறிய

EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".

EPS : தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது. ஏற்கனவே தேவையில்லை என்று தான் மன்னராட்சியை ஒழிக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி பேச்சு.

சேலம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் 2000க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "திமுக தலைவர் எப்பொழுது பார்த்தாலும் ஊடகச் செய்தி, பொதுக்கூட்டத்தில் பேசும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறுகிறார். அது இல்லை என்பதை இங்கு நிரூபித்து காட்டியுள்ளீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கூறுவார்கள். இங்கு கட்சியில் இணைந்தவர்கள் சாட்சி.

மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்:

மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதற்கு அதிமுகவில் பல்வேறு கட்சியிலிருந்து இணைந்துள்ளீர்கள். அதிமுக வலுவான கட்சி என்பதற்கு சாட்சியாக அமைந்து வருகிறது. திமுக தேய்ந்து வருகிறது என்றார். திமுக மீண்டும் மன்னராட்சி, வாரிசு ஆட்சி, குடும்ப ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே மக்கள் போராடி மன்னராட்சி, குடும்ப ஆட்சியை விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் மன்னராட்சி தமிழகத்தில் ஏற்பட துணை நிற்கக்கூடாது, ஏற்கனவே தேவையில்லை என்று தான் மன்னராட்சியை ஒழிக்கப்பட்டது என்றார்.

EPS Slams DMK:

குடும்ப ஆட்சிக்கு முடிவு:

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் வரவேண்டும் என்பதற்காக கருணாநிதி, அவருக்கு பிறகு ஸ்டாலின், பின்னர் உதயநிதி, தற்பொழுது இன்பநதி. திமுகவில் நிதி என்ற பெயர் வைத்துள்ளார்கள். நிதி வேண்டும் என்பதற்காக வைத்துள்ளார்கள். 2026 இல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தலாக அமையும். அப்பொழுது தான் மக்கள் வாழ முடியும் என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக மக்களை குழந்தைகள் போல் பாவித்தார்கள். மக்களுக்கு என்ன தேவை அவர்களுக்கு என்ன செய்யவேண்டும், அரசின் மூலம் போடும் திட்டத்தின் மூலமாக மக்கள் என்ன பயனடைவார்கள் என்று பார்த்து பார்த்து திட்டங்களை வகுத்தார்கள். மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் நம் தலைவர்கள். கருணாநிதி வீட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர். இதனால்தான் அதிமுகவை சீண்டி கூட பார்க்க முடியவில்லை, மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு பிரச்சினை வரும்போது உறுதுணையாக நின்றார்கள்.

அதிமுகவை ஒழிக்க பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை, ஏனென்றால் மக்களுக்கான கட்சியாக அதிமுக இருந்தது. எனக்கு பின்னாலும் நூறாண்டுகள் அதிமுக கட்சி வாழும் என்று மக்களை நம்பி தான் சொன்னார்கள். அதிமுகவிற்கு தனி தலைவர்கள் கிடையாது, அனைவரும் தலைவர்கள் பொறுப்பாளர்கள் தான் கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக சொத்து, வேற எந்த கட்சியும் இப்படி இருக்காது. அதிமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிமுக சொந்தம் என்றும் பேசினார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எண்ணற்ற திட்டங்களை அதிமுக நிறைவேற்றி கொடுத்துள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறுகிறார்கள், மக்களின் வரிப்பணத்தை தான் கொடுத்தார்கள். கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள். அதிமுக போரடி தான் ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுத்தது, அவர்களாக மனதார கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 1500 ரூபாய் கொடுப்பதாக உறுதி அளித்தோம். சில பேர் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை நம்பி மாற்றி ஓட்டுபோட்டார்கள் என்றும் கூறினார்.

EPS Slams DMK:

எம்ஜிஆரால் ஏழைகளுக்காக துவங்கப்பட்ட கட்சி அதிமுக. கண்ணை இமை காப்பது இருப்பதுபோல ஜெயலலிதா காத்தார்கள். அதிமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்லமுடியாத அளவிற்கு சிறப்பான ஆட்சியை அதிமுக அரசாங்கம் கொடுத்தது. தற்போது திமுக ஆட்சியில் அப்படி இல்லை. சிறுமிகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கற்பழிக்கிறார்கள். கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கு பார்த்தாலும் இருக்கிறது.

ஒரு சில ஆசிரியர்களால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படுகிறார்க பயிரை வேலி மேய்வது போன்று உள்ளது. இந்த திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்றார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு கொடுக்காவிட்டால் மாநில அரசின் வருவாய் எடுத்து கொடுக்க வேண்டியது தானே, ஏழை எளிய மக்களுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் பேசினார்.

 

E

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget