Annamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPS
அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை ஒத்துவரவில்லை என பேச்சு அடிபடும் நேரத்தில், எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் அண்ணாமலையை பார்த்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மொத்தமாக எழுந்து கையெடுத்து கும்பிட்டது கவனம் பெற்றுள்ளது. இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் செங்கோட்டையன், தங்கமணி போன்றவர்களும் அண்ணாமலைக்கு கொடுத்த மரியாதையை பார்த்து அதிமுகவினரே ஷாக் ஆகியுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் அதிமுக - பாஜக கூட்டணியை விரும்பினாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.
ஒருபக்கம் கூட்டணி தொடர்பான குடைச்சல் என்றால் மறுபக்கம் உள்கட்சி பிரச்சனை என்று எடப்பாடி பழனிசாமி சிக்கி தவித்து வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் பலர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட செங்கோட்டையன் இபிஎஸ் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இச்சூழலில் தான் கோவை ஈச்சனாரியில் எஸ்.பி.வேலுமணி இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டனர். அண்ணாமலை வந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வனாதன் உள்ளிட்டோர் எழுந்து நின்று அண்ணாமலையை கையெடுத்து கும்பிட்டனர். இந்த வீடியோ காட்சி தான் தற்போது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
அதாவது இபிஎஸ் எக்காலத்திலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று கூறி வரும் நிலையில் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கொடுத்திருக்கும் மரியாதை இபிஎஸ்-ஐ அப்செட்டாக்கி உள்ளதாக கூறப்படுகிறதும். மேலும் 2026-க்கான அதிமுக - பாஜக கூட்டணி அச்சாரம் தான் வேலுமணி இல்ல திருமணவிழா என்ற தகவலும் வெளியாகியுள்ளது.





















