IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
Champions Trophy IND vs AUS: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக தன்வீர் சிங் என்ற இந்தியரை ஆஸ்திரேலியா களமிறக்கியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் துபாயில் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - கூப்பர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஹெட் கொடுத்த கடினமான கேட்ச்சை ஷமி தவறவிட்டார்.
ஸ்பின் ஆதிக்கம்:
இன்றைய போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதில் பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி அக்ஷர் படேல், குல்தீப், வருண் சக்கரவர்த்தி, ஜடேஜா என 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியும் ஆடம் ஜம்பாவுடன் தன்வீர் சங்காவையும் களமிறக்கியுள்ளனர்.
யார் இந்த தன்வீர் சங்கா?
23 வயதே ஆன தன்வீர் சங்கா இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர். 2001ம் ஆண்டு பிறந்த இவர் கடந்த 2023ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது வரை 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடியுள்ள தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
ஆடம் ஜம்பா போன்ற பிரதான சுழற்பந்துவீச்சாளருடன் இன்று தன்வீர் சங்காவை ஆஸ்திரேலியா களமிறக்கியதற்கு முக்கிய காரணம் இவர் லெக் ஸ்பின்னர் என்பதாலே ஆகும். வலது கை லெக் ஸ்பின்னரான இவர் இன்றைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை வைத்து களமிறக்கியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக இந்தியர்:
தன்வீர் சங்கா 13 முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடி 37 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ போட்டிகள் 14 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளையும், 53 டி20 போட்டிகளில் ஆடி 68 விக்கெட்டுகளையும் வீழ்ததியுள்ளார்.
தன்வீர் சங்காவின் தந்தை ஒரு டிரைவர் ஆவார். தன்வீர் சங்காவின் பூர்வீகம் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் ஆகும். தன்வீர் சங்காவின் தாய் ஒரு கணக்காளர் ஆவார். இந்தியாவிற்கு எதிராக இந்தியரை களமிறக்கிய ஆஸ்திரேலியாவின் வியூகம் எடுபடுமா? என்பது சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களுடனன் ஆடி வருகிறது.
இந்த போட்டியில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட டிராவிஸ் ஹெட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி அவுட்டாக்கினார். அவரது சுழலில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்களில் இருந்த போது சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனே ஜோடி ஆடி வருகின்றனர்.