DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
Premalatha - EPS: தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுவதாக சொல்லவில்லை என இபிஎஸ் தெரிவித்த நிலையில், போட்ட ட்விட்டை, உடனே டெலிட் செய்தார் பிரேமலதா விஜயகாந்த்.

சத்தியமே வெல்லும், நாளை நமதே என தேமுதிக ட்விட் பதிவிட்ட நிலையில், அதனை உடனே நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இபிஎஸ் மற்றும் பிரேமலதா இடையிலான போக்குகளும், அதிமுக தேமுதிக கூட்டணி உடைகிறது என்பதை போன்ற சமிக்ஞைகளை தெரிவிக்கின்றன. இந்நிலையில், இபிஎஸ் என்ன சொன்னார்?, பிரேமலதா விஜயகாந்த் ஏன் டெலிட் செய்தார்? என்று பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்:
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி ஆகியவை என போட்டியிட்ட நிலையில், தேமுதிக , அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. ஆனால், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டது. தேமுதிக கட்சியானது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, அதிமுக கூட்டணியில், கட்சிகளுக்குள் பல்வேறு உடன்பாடுகளும் எட்டப்பட்டதாக கூறப்பட்டது. தேமுதிக கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இபிஎஸ் சொன்னது என்ன?
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. தேமுதிக கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் ( ராஜ்யசபா ) பதவி கொடுக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நாங்கள் எப்போது கொடுப்போம் என்று சொன்னோம்; நாங்கள் ஏதாவது சொன்னோமோ என்று இபிஎஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்திடம் , தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என கூறவில்லை என இபிஎஸ் கூறுகிறாரே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு , பதில் அளிக்காமல் சிறிது புன்னகையோடு பிரேமலதா விஜயகாந்த் சென்று விட்டார்.
Also Read: Zelensky: ரஷ்யாவுக்கு செக் வைக்கனும்.! உலக நாடுகளிடம் ஆயுதத்தை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!
தேமுதிக ட்விட், டெலிட்
ஆனால், சிறிது நேரம் கழித்து தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் , சத்தியம் வெல்லும், நாளை நமதே என்றும் #DMDK FOR TN, #DMDK FOR 2026 என்று ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2026ல் தேமுதிக என்ற ஹேஷ்டேக் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளன. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படுவதாக சொல்லவில்லை என இபிஎஸ் கூறிய நிலையில், தேமுதிகவின் ட்விட், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் , தேமுதிக கட்சியின் ஹேஷ்டேக்குகள் கூட்டணி உடைகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

ஆனால், சில மணி நேரங்களிலேயே, இந்த ட்விட்டானது எக்ஸ் பக்கத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், அடுத்த வருடம் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் அதிமுக கட்சி கூறி வரும் நிலையில்,அதிமுக-தேமுதிக போக்கானது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





















