Nirmala Sitharaman on Tax : "POPCORN - க்கு 18 % GST"ஆப்பு வைத்த நிர்மலா பொங்கி எழும் மக்கள்
காப்பீடு திட்டத்தின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் செய்யப்படாதது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயிலான கூட்டத்தில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பாப்கார்னுக்கு 18 சதவீத வரி விதிக்கவும், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை வரியை 18 சதவீதமாக அதிகரிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதோடு, ஆடை, காலணிகள் மற்றும் பழைய கார்களுக்கான வரியை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளையும் கவுன்சில் கூட்டம் வழங்கியுள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் மேற்கொள்ளாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய அளவிலான வரி விகிதங்களை குறைப்பது, உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான வரிவிதிப்பை தள்ளுபடி செய்வது மற்றும் மார்ச் 2026 காலக்கெடுவிற்குப் பிறகு இழப்பீட்டு செஸை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்த முக்கியமான விவகாரங்கள் மீதான முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உணவு டெலிவரி ஆப்ஸ் மீதான ஜிஎஸ்டியை 18% இல் இருந்து குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டாலும், விரைவு வர்த்தக நிறுவனங்கள் 18% வரி செலுத்தாததற்காக அபராதக் கட்டணங்களைத் தொடரும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.