ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் - ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
ADMK EPS: நாமக்கல்லில் மூதாட்டி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

ADMK EPS: நாமக்கல்லில் மூதாட்டி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், அதிமுக ஐடி விங் சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது.
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 9, 2025
மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு @AIADMKOfficial சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும்…
”தொடரும் முதியோர் கொலை”
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது.
”அக்னிப்பரீட்சை”
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தொடரும் கொலைகள்
பல்லடம் மற்றும் சதுரகிரியில் தனியாக வசித்து வந்த முதியோரை கொன்ற வழக்கில், கொள்ளையர்கள் மற்றும் திருட்டு நகையை வாங்கியவர் என மொத்தம் நான்கு பேரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2015ம் ஆண்டு முதல் 12 சம்பவங்களில் 19 கொலைகலள் செய்து நகைகளை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது நடவடிக்கையால் இத்தைய சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாமக்கல்லில் அரங்கேறியுள்ள சம்பவமதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















