Pro Kabaddi 2023: பாட்னா பைரேட்ஸை இன்று எதிர்கொள்ளும் தெலுங்கு டைட்டன்ஸ்.. நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்? எங்கே பார்ப்பது?
டிசம்பர் 2 அன்று குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான தோல்விக்கு பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் இன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறது.
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 8வது போட்டியில் இன்று (டிசம்பர் 6) தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியத்தின் EKA அரங்கில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் எப்படி..?
டிசம்பர் 2 அன்று குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான தோல்விக்கு பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் இன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறது. தெலுங்கு அணி அன்றைய போட்டியில் 32-38 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
தெலுங்கு டைட்டன்ஸ் vs பாட்னா பைரேட்ஸ் இதுவரை நேருக்கு நேர்:
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 21 முறை பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த நேருக்கு நேர் மோதியதில் இரு அணிகளும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இரு அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.
சீசன் 9ல் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் பைரேட்ஸ் 36-35 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
சீசன் 10 இல் 1 போட்டிக்குப் பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் 10 புள்ளிகள் பட்டியலில் தெலுங்கு டைட்டன்ஸ் ஒரு போட்டியில் விளையாடி ஒரு தோல்வியுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஒரு போட்டியில் ஒரு தோல்வியுடன் 1 புள்ளியை குவித்துள்ளது.
பாட்னா பைரேட்ஸ், இதற்கிடையில், இந்த சீசனில் தங்கள் முதல் போட்டியில் இன்று விளையாடுகிறது. பாட்னா பைரேட்ஸ் கடந்த ப்ரோ கபடி சீசன் 9ல் 8 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 3 டைகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்தது. எனவே, இந்த சீசனில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும்.
தெலுங்கு டைட்டன்ஸ் vs பாட்னா பைரேட்ஸ் முன்னணி வீரர்கள்:
தெலுங்கு டைட்டன்ஸ்:
இந்த சீசனில் 1 போட்டியில் 10 ரெய்டு புள்ளிகளை குவித்த பிறகு பவன் செஹ்ராவத் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் முதன்மை ரைடராக தற்போது திகழ்ந்து வருகிறார். மேலும் இன்றைய போட்டியிலும் தாக்குதலை மீண்டும் தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பிகேஎல் 10ல் தனது ஒரே ஆட்டத்தில் 1 டேக்கிள் பாயிண்டைப் பெற்ற சந்தீப் துல் தலைமையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது. பிகேஎல் சீசன் 10ல் இதுவரை 5 புள்ளிகளைக் குவித்துள்ள சஞ்சீவி எஸ் அணியில் முதல் ஆல்ரவுண்டராக உள்ளார்.
பாட்னா பைரேட்ஸ்:
பாட்னா பைரேட்ஸ் அணிக்கு சச்சின் முக்கிய ரைடராக இருப்பார். அவர் 106 பிகேஎல் போட்டிகளில் 781 ரெய்டு புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதில் 195 டூ-ஆர்-டை ரெய்டு புள்ளிகள் அடங்கும்.
நீரஜ் குமார் 66 ஆட்டங்களில் 141 டிஃபெண்டு புள்ளிகளைப் பெற்ற அணியின் முதல் டிஃபெண்டராக ஆதிக்கம் செலுத்து வருகிறார். அதேசமயம் சஜின் சந்திரசேகர் 36 ஆட்டங்களில் 45 புள்ளிகளைப் பெற்று பாட்னா பைரேட்ஸ் அணியில் சிறந்த ஆல்ரவுண்டராகவும் ஜொலிக்கிறார்.
படைவிருக்கும் மைல்கற்கள்:
- தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பவன் செஹ்ராவத் தனது பிகேஎல் வாழ்க்கையில் 1000 ரெய்டு புள்ளிகளை எட்ட 3 ரெய்டு புள்ளிகள் தேவை.
- தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் சந்தீப் துல்லுக்கு 300 டிஃபெண்ட் புள்ளிகளை எட்ட இன்னும் 8 டிஃபெண்ட் புள்ளிகள் தேவை.
புரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?
ப்ரோ கபடி சீசன் 10 இலிருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், Disney+Hotstar மொபைல் ஆப்களிலும் இலவசமாக பார்க்கலாம்.