மேலும் அறிய

Pro Kabaddi 2023: தரமான சம்பவம் செய்த தமிழ் தலைவாஸ்.. பாட்னாவை 41-25 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தல்..!

தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 41-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்தது. 

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 16ம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில், தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை  என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்தது. 

டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணியை முதலில் ரெய்டு செய்ய அழைத்தது. போட்டி தொடங்கியது முதலே தமிழ தலைவா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.  தொடங்கிய 13 நிமிடத்திற்குள் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை ஆல் அவுட் செய்து 12 - 6 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க தொடங்கியது. 

தொடர்ந்து தமிழ் தலைவாஸ் வீரர் நரேந்தர் ரெய்டில் சிறப்பாக செயல்பட்டு பாட்னா வீரர்களை அவுட் செய்ய, தமிழ் தலைவாஸ் அணியின் பாயிண்ட்ஸ்கள் குவிய தொடங்கியது. மறுபுறம் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்களும் தொடந்து பாட்னா வீரர்களை எளிதாக வீழ்த்த, தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் முதல் பாதி முடியும்போது தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளும், பாட்னா பைரேட்ஸ் அணி 11 புள்ளிகளும் எடுத்து இருந்தது.

சரியாக, இரண்டாவது பாதி தொடக்கத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ் அணி. அடுத்ததாக ரெய்டுக்கு உள்ளே வந்த சுதாகரை ஹிமான்ஷு டிபென்ஸ் செய்து தூக்க, மீண்டும் மோஹித் சிறப்பாக டிபென்ஸ் செய்து சச்சினை வீழ்த்தினார். 

அப்போது தமிழ் தலைவாஸ் அணி 30-12 என முன்னிலை வகிக்க தொடங்கியது. அதன்பிறகு எழுச்சியுற்ற பாட்னா அடுத்தடுத்து சிறப்பாக விளையாடி 9 புள்ளிகளை தூக்கியது. கடைசி 6 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அஜிங்கயா 1 புள்ளிகளை அள்ளிவர, உள்ளே வந்த சச்சின் 2 பேரை தூக்கினார். தொடர்ந்து, சுதாகரை மோஹித் தூக்கி சூப்பர் டேகிளில் 2 புள்ளிகளை பெற்று தந்தார். அடுத்தடுத்து தமிழ் தலைவாஸ் அணியினர் பாயிண்ட்ஸ்களை அள்ள, இறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி 41-25 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியிடம் வீழ்ந்தது. 

தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக அஜிங்க்யா பவார் 10 ரெய்டு புள்ளிகளை பெற்று அசத்தியிருந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
400 சிசி எஞ்ஜின்.. ஹைவே-யில் அசத்தும் Triumph பைக்குகள் - விலை, மைலேஜ் உள்ளே!
400 சிசி எஞ்ஜின்.. ஹைவே-யில் அசத்தும் Triumph பைக்குகள் - விலை, மைலேஜ் உள்ளே!
காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லையா..? செய்தியாளர்களுக்கு உதயநிதி என்ன பதில் குடுத்தார் தெரியுமா?
காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லையா..? செய்தியாளர்களுக்கு உதயநிதி என்ன பதில் குடுத்தார் தெரியுமா?
TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..
TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..
IND vs PAK: பாக் எதிராக தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், ஹர்திக்.. ஒரு அரை சதம் கூட இல்லை! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்
IND vs PAK: பாக் எதிராக தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், ஹர்திக்.. ஒரு அரை சதம் கூட இல்லை! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்
Embed widget