மேலும் அறிய
Tamilnadu Roundup: இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
Tamilnadu Headlines(08.08.25): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை தற்போது தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என்றும், இருமொழிக் கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை.
- இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ல் கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.
- தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து மக்கள் பெருமைப்படும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வயிற்றெரிச்சலில் புலம்பி வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சித்துள்ளார்.
- நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் கீழே விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
- அன்புமணி ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு தடைகோரிய ராமதாஸ் தரப்பின் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,470-க்கும் விற்பனை.
- வரத்து குறைவால் சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை.
- வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை வடக்கு மணஞ்சியூர் கிராம்தில், ரூ.30,000-த்திற்காக 5 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணியாற்றிய தம்பதியை, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மீட்டுள்ளார்.
- சத்தீஸ்கர் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி கடத்தப்பட்ட 18 மாத குழந்தை, 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு. குழந்தையை கடத்திய ஆறுமுகம் என்பவர் கைது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















