ஒரே குழப்பமா இருக்கே.. முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா?
கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றார்.

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது சமூக வலை தளங்களில் மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.
நடிகரும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் கோவை மாவட்டம் மாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் 'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானர், அதனை தொடர்ந்து 'பென்குயின்' படத்திலும் நடித்திருந்தார். என்னத்தான் சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தனது கேட்ரிங் மூலம் மக்களிடம் பிரபலமானர் மாதம்பட்டி ரங்கராஜ்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்று வரும் மதமபட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர். சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிறிசால்டாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டதாக கூறி திருமண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்ததும் பரபரப்பு கிளம்பியது. ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்தாரா என்ற கேள்வி நெட்டிசன்களிடையே எழுந்தது. இதற்கிடையில், கிரிசில்டா தாம் ஆறு மாதம் கர்ப்பிணி என அறிவித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
Madhampatty Rangaraj spotted with his wife Shruti Rangaraj at a function recently.#MadhampattyRangaraj #chefmadhampattyrangaraj #MrandMrsRangaraj #JoyCrizildaa pic.twitter.com/wA6BHV5T6Y
— Kolly Buzz (@KollyBuzz) August 12, 2025






















