மேலும் அறிய
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today August 8: இந்தியா முழுவதிலும் இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். மத்திய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
- அன்புமணி ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு தடைகோரிய ராமதாஸ் தரப்பின் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,470-க்கும் விற்பனை.
- வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்பாவிட்டால், எஸ்மா சட்டம் பாயும் என மேலாண் இயக்குநர் எச்சரிக்கை.
- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு முழு அதிகாரம் வழங்கி NDA கட்சிகளின் கூட்டத்தில் முடிவு.
- போலி வாக்காளர்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சி ஒருநாள் ஆளும் கட்சியாக மாறும்போது, எங்களிடம் இருந்து நீங்கள் தப்ப முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். தேர்தல் ஆணையம் முழு விவரங்களை வழங்கவும் வலியுறுத்தல்.
- ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறாக வழிநடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் பதில். தான் சொல்வது உண்மை என நம்பினால் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு புகார் அளிக்க அறிவுறுத்தல்.
- வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, வரும் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்த இண்டியா கூட்டணி கட்சிகள் முடிவு.
- பீகாரில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரில் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவானதால் அதிர்ச்சி. ட்ரம்ப் புகைப்படத்துடன் போலி ஆதாரும் பதிவேற்றம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















