மேலும் அறிய

ஸ்ரீரங்கம் கோயில்: யுனெஸ்கோ அங்கீகாரம் பெற துரை வைகோ தீவிரம்! உலகப் பாரம்பரிய அந்தஸ்து கிடைக்குமா?

திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து எடுத்துரைத்தேன்.

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் திருச்சி எம்.பி., துரை வைகோ வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

திருச்சி எம்பி துரைவைகோ மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-ஐ சந்தித்து  உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் இதுகுறித்து எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளதாவது:

 (12.08.2025) அன்று மத்திய கலாச்சார துறை அமைச்சர்  கஜேந்திர சிங் செகாவத்தை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். மேலும் இதற்கு முறையாக பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை கடிதம் கொடுத்தேன்.

இந்தச் சந்திப்பில், ஸ்ரீரங்கம் கோயில் ஒரு மரியாதைக்குரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகத் திருத்தலமாகவும், கட்டிடக்கலையில் அற்புதங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயிலாகவும் திகழ்வதை விளக்கி கூறினேன். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில், 2014ஆம் ஆண்டு இந்திய அரசால் யுனெஸ்கோவின் தற்காலிக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினேன். யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ள 10 தகுதிகளில் ஒரு தகுதியை பூர்த்தி செய்தாலேயே இந்த உலக பாரம்பரிய சின்னம் தகுதி கிடைக்கும் சூழ்நிலையில், ஶ்ரீரங்கம் திருத்தலமானது இவற்றுள் நான்கு தகுதிகளை பூர்த்தி செய்கிறது என்பது குறித்தும் விளக்கி கூறினேன். 

2017ஆம் ஆண்டு இந்தக் கோயில் விஞ்ஞான ரீதியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதற்காக யுனெஸ்கோவின் விருது பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினேன். இந்த விருது, கோயிலின் பாரம்பரிய முக்கியத்துவத்தையும், அதை பாதுகாக்கும் முயற்சிகளையும் உலகளவில் அங்கீகரிக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த அங்கீகாரம், ஸ்ரீரங்கம் கோயிலை முழுமையான உலக பாரம்பரிய தலமாக உயர்த்துவதற்கு வலுவான அடித்தளத்தை அளிப்பதாகவும் தெரிவித்தேன்.

ஸ்ரீரங்கம் கோயில், அதன் ஒப்பற்ற கட்டிடக்கலை பிரம்மாண்டத்திற்கும், ஆழமான ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும் எடுத்துக்காட்டாக உலகிலேயே மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள இந்து கோயில் வளாகமாகத் திகழ்வதை சுட்டிக்காட்டி, 2014ஆம் ஆண்டு தற்காலிக பட்டியலில் இடம்பெற்ற இந்தக் கோயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பதற்கு முறையாகப் பரிந்துரை செய்யவும், அதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பாரம்பரிய நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அமைச்சரிடம் வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். 

திருச்சி மக்களும், நாடு முழுவதும் உள்ள பக்தர்களும் ஸ்ரீரங்கம் கோயிலை, கலாச்சாரப் பொக்கிஷத்தை ஆழமாக மதிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரித்து, எதிர்கால சந்ததியினர் இந்த கோயிலை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
திடீரென மாற்றப்பட்ட ரயில் நேரங்கள்! பயணிகள் செய்ய வேண்டியது என்ன?
திடீரென மாற்றப்பட்ட ரயில் நேரங்கள்! பயணிகள் செய்ய வேண்டியது என்ன?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget