FIFA World Cup 2022: உலககோப்பை கால்பந்து திருவிழா...! கத்தாருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்...
ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில், பிரேசில் நாட்டு கால்பந்து ரசிகர்கள் இப்போது முதலே கத்தாருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில், பிரேசில் நாட்டு கால்பந்து ரசிகர்கள் இப்போது முதலே கத்தாருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
உலககோப்பை திருவிழா :
மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த முறை உலகக் கோப்பை திருவிழா கோலாகலமாக தொடங்கவுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று கால்பந்து. ஏழைகளின் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கால்பந்து, மேற்கத்திய நாடுகளில் வாழ்வியலோடு இணைந்து ஒன்று போன்றது என்றே கூறலாம். அந்த அளவுக்கு கால்பந்தை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும், தென் அமெரிக்க நாடான பிரேசில் இதுவரை 5 முறை சாம்பியன் ஆகி அதிக முறை உலகக் கோப்பையில் சாம்பியன் ஆன அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை உலகக் கோப்பை பேரணியை நடத்தினர். அர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, பிரேசில் வீரர் நெய்மர் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேனின் ரசிகர்கள் தோஹா கடற்கரையில் அணிவகுத்துச் சென்றனர், இது பொதுவாக அனுமதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் :
கத்தாரில் மொத்தம் 28 லட்சம் மக்கள்தொகை உள்ளது. அதில் சுமார் 7.5 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து வேலைக்காக சென்றுள்ளவர்கள் ஆவர். அதிலும் கேரளாவில் இருந்து அதிகம் பேர் அங்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
இந்தியாவில் கேரளாவில் தான் கால்பந்து ரசிகர்கள் அதிகம் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் கால்பந்து கோட்டை என்றும் கேரளாவை அழைப்பார்கள். இவ்வாறாக கேரளத்தைச் சேர்ந்த ரசிகர்கள் உரிய முன் அனுமதி பெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அணிவகுத்துச் சென்றனர்.
கத்தாரில் அவ்வளவு எளிதில் இதற்கெல்லாம் அனுமதி கொடுக்க மாட்டார்கள். ஆனால், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதை முன்னிட்டு இதுபோன்ற நிகழ்வுகளுக்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் கால்பந்து போட்டிகளை காண முன்பதிவு செய்துள்ளனர். இதன் வாயிலாகவும் கத்தாருக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
Brazil fans are already taking over Qatar 🇧🇷 pic.twitter.com/gl8WThHK7Z
— B/R Football (@brfootball) November 11, 2022
இதேபோல், பிரேசில் ரசிகர்களும் கத்தாரை அதிரவைத்து வருகின்றனர்.
ஆசிய நாடு :
முன்னதாக, 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடர் 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை. இந்த உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், இவை மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், 2022 FIFA உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட அர்ஜென்டினா அணி தற்போது அறிவிக்கப்பட்டது. ஐந்தாவது உலகக் கோப்பையில் பங்கேற்கும் லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த அக்டோபரில் இருந்து தொடை காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முன்கள வீரர் பாலோ டிபாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வீரர்களில் 21 பேர் அர்ஜென்டினாவின் 2021 கோபா அமெரிக்கா வெற்றியின் ஒரு பகுதியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.