தேடிச்சென்று பாராட்டிய எம்.பி. ச.முரசொலி… ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
அரசு, அரசு உதவி பெறம் பள்ளிகளில் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தஞ்சாவூர்: நேரில் தேடிச் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டிய தஞ்சாவூர் எம்.பி.யால் ஆசிரியர்கள், மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரில் சென்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை பாராட்டி வாழ்த்தினார்.
பள்ளிகளை தேடி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட அரசு, அரசு உதவி பெறம் பள்ளிகளில் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாகும். அதில் பனையக்கோட்டை, பொன்னாப்பூர், கருக்காடிப்பட்டி, திருமங்கலக்கோட்டை கீழையூர், நெய்வாசல், நாட்டு சாலை , சிரமேல்குடி , கழுகுபுலிக்காடு , ஆவணம் , கரிசவயல், வல்லம், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர், மேலதிருப்பந்துருத்தி, ஆலங்கோட்டை ஆகிய பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரில் சென்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போற்றி, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதனால் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். முதல் கட்டமாக தஞ்சையை அடுத்த நெய்வாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை எம்.பி. நேரில் சென்று பாராட்டினார்.
பின்னர் இதுகுறித்து தஞ்சை எம்.பி. முரசொலி கூறியதாவது: பள்ளிகளை தேடி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டும் வகையில் பொன்னாடை போற்றி, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இது மாணவர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கவுரவப்படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.





















