“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop Scam
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கட்சிபட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், கல்லூரி மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 20 கிலோ அரிசிக்கு பதில் 17 கிலோ அரிசி மட்டுமே இருந்ததால் அந்த இளைஞர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியில் அரசு நியாயவிலைக் கடை இயங்கிவருகின்றது. சுமார் 900க்கும் மேற்பட்டவர்கள் இந்த கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ,கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நம்பி தான் மக்கள் இருக்கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை எடை குறைவாக அளித்துவிட்டு, மீதமுள்ள அரிசியை கள்ள சந்தையில் ரேஷன் கடை ஊழியர்கள் விற்பனை செய்வதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. கட்சிப்பட்டு ரேஷன் கடைக்கு வந்த ஒரு கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடைய குடும்ப அட்டைக்கு 20 கிலோ ரேஷன் அரிசி வாங்கி உள்ளார். எலக்ட்ரானிக் தராசில் எடை போட்டு விற்பனை செய்த கடையின் விற்பனையாளர் எடை குறைவாக அரிசி அளித்ததால் அந்தக் கல்லூரி மாணவர் ஏன் இவ்வளவு எடை குறைவாக உள்ளது என கூறிவிட்டு தன்னுடைய பொருளை கடை முன்பே வைத்துவிட்டு, வீடியோ எடுப்பதற்காக செல்போன் எடுத்து வர சென்ற சமயத்தில் இவர் வாங்கிய அரிசிகளை கடை விற்பனையாளர் எடுத்து தங்களுடைய மூட்டைகளில் கொட்டிவிட்டு அமைதியாக இருந்துள்ளனர்.
கல்லூரி மாணவர் திரும்பி வந்து எங்கே நான் வாங்கி அரிசி என கேட்டபோது ரேஷன் கடைக்காரர்கள் பதில் சொல்லாமல் அந்தக் கல்லூரி மாணவரை ஒருமையில் பேசி உள்ளனர். அதனால் ஆவேசப்பட்ட அந்த கல்லூரி மாணவர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ரேஷன் கடைக்காரர்களை கேள்வி மேல் கேள்வி எழுப்பியதால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.





















