சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது, சிங்கத்தின் கால்கள் பழுது படவில்லை அப்பறம் எப்படி பழுதுபடும் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியோடு தான் போட்டியிடுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கடலூர், சேலம், ஈரோடு, அரியலூர் தஞ்சை, திருவள்ளூர், கோவை ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுச்சேரியை சார்ந்த மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறைந்த அளவே மாவட்ட செயலாளர்களும் மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்ட நிலையில் கெளரவ தலைவர் ஜி.கே.மணி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் முன்னாள் எம்எல்ஏ மேகநாதன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர்கள், மாவட்ட செய்லாளர்கள் கூட்டம் துவங்கியபோதே செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும், பாமக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கூட்டம் நடத்தப்படுவதாகவும்,
வன்னியர் சங்க மாநாட்டில் பிரமாண்டமான கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்றதாக ராமதாஸ் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், படுத்துகொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இந்த கூட்டத்தில் அறிவுறுத்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும், வெற்றி பெற எப்படி உழைப்பது, சட்டமன்ற தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, கட்சி நிர்வாகிகளை உற்சாக படுத்தவும் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது என கூறினார்.
அடுத்தடுத்து தொடர்ந்து ஏழு நாட்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள் மகளிரனி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் தினந்தோறும் நடைபெற உள்ளதாகவும் நிர்வாகிகள் யோசனைகள் இந்த கூட்டத்தில் கேட்டப்பட்டு வெற்றி பெற யோசனைகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார். பாமக கட்சியின் வளர்ச்சிக்காக ஆலோசனை நடைபெறுவதாகவும்
செயல்தலைவர் அன்புமனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அவர் வரலாம் வராமலும் போகலாம் அது அவர் விருப்பம் என்று தெரிவித்த அவர் மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் மாநாட்டிற்கு பிறகு களைப்போடு உள்ளதால் கூட்டத்திற்கு வருகை புரியவில்லை என்று கூறினார். மாவட்ட செயலாளர்கள் புறக்கணித்துள்ளதாக கேள்விக்கு பதிலளித்த அவர் யார் பேரிலையும் விரும்புகிற வரை நீக்க தேவையில்லை அவர்கள் விருப்படி மாற்றபடுவார்கள் என தெரிவித்த அவர் கட்சியில்
கோஷ்டி மோதல் கிடையாது தனியாக நின்றாலும் 40 தொகுதிகள் வெற்றி பெறனும் நிச்சயமாக கூட்டணி உண்டு என தெரிவித்தார். வன்னியர்களுக்கு
10.5 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதற்கு கடுமையான போராட்டம் செய்வோம் அதற்கான அறிவிப்பு வரும், சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது, சிங்கத்தின் கால்கள் பழுது படவில்லை அப்பறம் எப்படி பழுது படும் என சுப்பிரமணிய சுவாமி ஒருவருக்கு தெரிவித்தாதாக சூசகமாக ராமதாஸ் கூறினார்.





















